Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

33 பந்துகளில் சதம் விளாசிய ஃபின் ஆலன்.. அதிக விலைக்கு BBL தொடரில் செல்ல வாய்ப்பு

சிட்னி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 27 வயதான தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் , பிக் பாஷ் லீக் வரலாற்றிலேயே மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரராக மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026-27 சீசனுக்கு முன்னதாக, பல பிபிஎல் அணிகள் ஆலனைத் தங்கள் அணியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின் ஆலனுக்கு 6,00,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக, அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் அவரை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக முயன்று வருவதாக கோட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Finn allen

விக்கெட் கீப்பராகவும் செயல்படக்கூடிய நியூசிலாந்தின் டாப்-ஆர்டர் பேட்டரான பின் ஆலன், கடந்த 2025-26 பிபிஎல் சீசனில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடிய அவர், 184.18 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 466 ரன்கள் குவித்து, அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்காற்றினார்.

இந்திய வம்சாவளி அமெரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் தடை.. ஸ்பாட் பிக்சிங் புகாரில் ஐசிசி அதிரடி

இந்திய வம்சாவளி அமெரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் தடை.. ஸ்பாட் பிக்சிங் புகாரில் ஐசிசி அதிரடி

அதனைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை மற்றும் அதே ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் அவர் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். குறிப்பாக, மார்ச் 4 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், 170 ரன்கள் இலக்கைத் துரத்திய போது நியூசிலாந்து அணிக்காக களம் இறங்கிய பின் ஆலன் வெறும் 33 பந்துகளில் 100 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் தொடரிலும் கேகேஆர் அணிக்காக அசத்திய அவர், 11 போட்டிகளில் விளையாடி 214.11 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 349 ரன்கள் குவித்தார். இந்த நடப்பு ஆண்டில் மட்டும் டி20 கிரிக்கெட்டில் அவர் இதுவரை 97 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

பின் ஆலன் தவிர்த்து, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் இந்த முறை பெரிய தொகையிலான பிபிஎல் ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை ஒப்பந்தம் செய்ய சிட்னி சிக்சர்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

Also Read

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

ஸ்டோக்ஸ் இதற்கு முன்பு 2014-15 பிபிஎல் சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் இந்த முதன்மை டி20 தொடருக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, August 4, 2026, 13:30 [IST]
Other articles published on Aug 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+