KKR vs DC : அறிமுக போட்டியின் முதல் பந்திலே டக் அவுட்… மோசமான சாதனை படைத்த கொல்கத்தா வீரர்
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வீரர் டென்லி தனது அறிமுக போட்டியின் முதல் பந்திலே இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் 26வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு துவங்கியது. போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.
போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுப்மான் கில் களமிறங்கினார்.

கொல்கத்தா வீரர் டென்லி
போட்டியில் முதல் பந்தினை சந்தித்தார் டென்லி. ரசிகர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசுகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தனது அறிமுக போட்டி என்பதால் அரங்கமே பெரியதாக எதிர்பார்த்தது. தொடக்கமே மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

முதல் போட்டியில் டக்
ஆனால்... யாரும் எதிர்பாராத வண்ணம், முதல் பந்திலே இஷாந்த் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தனது அறிமுக போட்டியிலே அதுவும் முதல் பந்திலே டக் ஆகி மோசமான சாதனைக்கு டென்லி சொந்தக்காரர் ஆனார்.

6வது நபர் டென்லி
டென்லி போலவே.. ஏற்கனவே 5 பேர் இதுபோன்று முதல் பந்திலே ஆட்டமிழந்தவர்கள் இருக்கின்றனர். சந்தீப் லமிச்சானே, சன்னி குப்தா, சேட்டன் நந்தா, வீர் பிரதாப் சிங், ஷிவில் கவுசிக் ஆகிய 5 பேரும் இதே போன்று முதல் பந்தில் தமது விக்கெட்டை பறிகொடுத்து இருக்கின்றனர். இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் க்றிஸ் லின் மற்றும் சுனில் நரைன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications