Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

138 வருட கால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு ஆட்டம் அறிமுகம்!

அடிலெய்டு: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, டெஸ்ட் போட்டி, பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே அடிலெய்டு, ஓவல் மைதானத்தில், இப்போட்டி நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.

138 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பகல்-இரவு ஆட்டமாக ஒரு போட்டி நடைபெறுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஆஸி.-நியூசி. போட்டி

ஆஸி.-நியூசி. போட்டி

சேப்பல்-ஹேட்லி டெஸ்ட் சீரிஸ் தொடரில் ஆட ஆஸ்திரேலியா பயணிக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இவ்விரு அணிகளுக்கு நடுவேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில், நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது. அப்போட்டி பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.

138 வருடங்கள் முன்பு..

138 வருடங்கள் முன்பு..

டெஸ்ட் போட்டிகள் 1877ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன. இதுவரை ஆட்டத்தில் பல மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ஆனால், பகல்-இரவாக நடைபெற போகும் முதல் டெஸ்ட் போட்டி இதுவேயாகும். இதுவரை 2168 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஈர்ப்பு

ரசிகர்கள் ஈர்ப்பு

அலுவலகம் முடிந்தும், பள்ளி, கல்லூரி முடிந்தும் வீடு திரும்புவோர் டெஸ்ட் போட்டிகளை பார்க்க வசதியாக இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். பகலில் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளை காண ரசிகர்கள் வருவதில்லை என்பதை கருத்தில் கொண்டு, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கும் நல்லது

வீரர்களுக்கும் நல்லது

பகல்-இரவு, டெஸ்ட் போட்டிகள் இனிமேல் இந்தியாவிலும் நடத்தப்பட இந்த முன்முயற்சி அடித்தளம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஒருநாளைக்கு 90 ஓவர்கள் வரை வீசப்பட வேண்டிய டெஸ்ட் போட்டியை இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் பகலில் ஆடும்போது, வீரர்களுக்கு பெரும் உடல் சிரமம் ஏற்படும். பகல்-இரவாக ஆடும்போது, உடல் பாதிப்புகள் குறையும்.

Story first published: Tuesday, June 30, 2015, 14:48 [IST]
Other articles published on Jun 30, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+