Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2021ல முதல் சதம்... கேன் வில்லியம்சனின் கலக்கல் ஜூகல்பந்தி!

ஹாக்லி ஓவல் :நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 297 ரன்களை குவித்துள்ள நிலையில் இரண்டாவது ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அந்த அணியைவிட 11 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

இந்த போட்டியிலும் தொடர்ந்து சதமடித்துள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆண்டின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரணடாவது போட்டி நேற்றைய தினம் ஹாக்லி ஓவலில் துவங்கியது. இதில் முதலில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 297 ரன்களை குவித்தது.

கலக்கிய வில்லியம்சன்

கலக்கிய வில்லியம்சன்

இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி துவக்கத்தில் தடுமாறிய நிலையில், களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தியுள்ளனர். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தானைவிட 11 ரன்களே நியூசிலாந்து பின்தங்கியுள்ளது.

கேன் வில்லியம்சன் அபாரம்

கேன் வில்லியம்சன் அபாரம்

இந்த போட்டியின்மூலம் இந்த ஆண்டின் முதல் சதத்தை கேன் வில்லியம்சன் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த அவர், கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி சாதனை

ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான தற்போதைய போட்டியில் அவர் அவுட் ஆகாமல் 112 ரன்களை அடித்ததன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 24வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவரின் தொடர் சதங்களின்மூலம் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு தாவியுள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 14:49 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+