Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"கப் ஜெயிச்சுட்டு வாங்க டாடி"... பிஞ்சு கை காட்டி வாழ்த்தும் டோணி மகளின் ஃபஸ்ட் லுக்!

சினிமாவிற்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவார்கள். நம்ம கிரிக்கெட் தல டோணியின் மகளின் பிஞ்சு கை ஒன்றின் ஃபஸ்ட் லுக் போட்டோ போட்டு அசத்தியுள்ளார் அவரது மனைவி சாக்ஷி.

மகள் பிறந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் டோணி, மகளை பார்க்காவிட்டாலும் நாட்டிற்காக ஆடி வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கிறார்.

மூன்றிலும் வெற்றி

மூன்றிலும் வெற்றி

பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, யுஏஇ ஆகிய அணிகளுடன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவித்துள்ள டோணி குழு மார்ச் 6 ஆம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது. இதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மகளின் போட்டோ

மகளின் போட்டோ

இந்த நிலையில் டோணியின் மனைவி சாக்ஷி தனது மகளின் முதல் போட்டோ ஒன்றினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மகிழ்ச்சியில் சாக்ஷி

மகிழ்ச்சியில் சாக்ஷி

தன்னுடய மகளின் இடது கையை தன்னுடைய கையினால் தொட்டுக்கொண்டிருப்பது போன்ற படத்தை போட்டு பண்டில் ஆஃப் ஜாய் என்று கருத்திட்டுள்ளார்.

பாசமான அப்பா, அம்மா

பாசமான அப்பா, அம்மா

மகளின் ஒரு கை உடைய படத்தை போட்டு மகளுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார் சாக்ஷி. இந்த அழகான உலகிற்கு உன்னை வரவேற்கிறோம் ஸிவா, அப்பாவும், அம்மாவும் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சாக்ஷி.

டோணியின் மகள்

டோணியின் மகள்

பிப்ரவரி 6ஆம் தேதி டோணி - சாக்ஷி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோணியால் இன்னமும் தன்னுடைய குழந்தையை பார்க்க வரமுடியவில்லை.

நாட்டிற்காக விளையாடுகிறேன்

நாட்டிற்காக விளையாடுகிறேன்

மகளை பார்க்க முடியவில்லையே என்ற கவலையில்லை நாட்டிற்காக விளையாடுவதே தன்னுடைய கடமை என்று கூறியுள்ள டோணி, அதனை நிரூபித்தும் வருகிறார் டோணி.

கப் ஜெயிச்சுட்டு வாங்க டாடி என்று மகளின் கை வாழ்த்துவது போல உணர்ந்திருப்பாரோ டோணி.

Story first published: Wednesday, March 4, 2015, 8:43 [IST]
Other articles published on Mar 4, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+