
8 ஐபிஎல் அணிகள் முகாம்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் யூஏஇயில் முகாமிட்டுள்ளனர். அங்கு குவாரன்டைனில் ஈடுபட்ட அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு வளையத்தில் இவர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்படுவார்கள். தொடர்ந்து துபாய் மற்றும் அபுதாபியில் பயிற்சிகளில் அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விராத் கோலி உற்சாகம்
இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடைபெற்றுள்ள இந்த முதல் பயிற்சி முகாமில் சக வீரர்களுடன் மேற்கொண்ட பயிற்சி மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் மகிழ்ச்சி
இதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேற்று மாலை முதல் தங்களது பயிற்சிகளை துவக்கியுள்ளது. இதுகுறித்து அந்த அணி அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளது. தங்களது குவாரன்டைனை ஹோட்டல் அறைகளை பூர்த்தி செய்த அணி வீரர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோகித், பும்ரா பயிற்சி
இதேபோல சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் தங்களது பயிற்சிகளை துவக்கி ஆடி வருகின்றனர். அபுதாபியில் ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயிற்சி மேற்கொண்ட நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துபாயின் ஐசிசி அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











