Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் இல்லாத தென்னாப்பிரிக்கா தொடர் சவாலானதே: டோணி

ஜோகனஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் இல்லாத தென்னாப்பிரிக்கா தொடர் சவாலானதாகவே இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று நள்ளிரவில் மும்பையில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்றது. அப்போது செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் டோணி கூறியதாவது:

டெண்டுல்கர் ஓய்வுக்குப் பின்...

டெண்டுல்கர் ஓய்வுக்குப் பின்...

சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியின் முதல் பயணம் இது. குறிப்பிட்ட வீரர் ஓய்வு பெறும் போது எப்போதுமே அது புதிய தொடக்கமாகத்தான் இருக்கும்.

சவாலானதே..

சவாலானதே..

இந்த தொடர் அனைத்து வீரர்களுக்கும் புதிய சவாலாகும். வெளிநாடு தொடர்கள் எப்போதுமே சவால் மிக்கவை. பந்து வீச்சாளர்கள் சரியான திசையில், எகிறும் ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒருநாள் போட்டி நல்லதுதான்..

ஒருநாள் போட்டி நல்லதுதான்..

ஒரு நாள் போட்டியுடன் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவது நல்லதும் கூட. பேட்ஸ்மேன்கள் இதில் சிறப்பாக விளையாடி அதன் அனுபவத்தின் துணையுடன் அடுத்து வரும் டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

கம்பீருக்கு பதில்..

கம்பீருக்கு பதில்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளிவிஜயும், ஷிகார் தவானும் நன்றாக விளையாடி வருகின்றனர். இப்போதைக்கு எங்களது 3வது தொடக்க ஆட்டக்காரர் பரிசீலனையில்தான் கம்பீர் இருக்கிறார். ஆனால் அவர் அணியில் இடம் பெறவில்லை.

சச்சின் இடத்தில்..

சச்சின் இடத்தில்..

டெஸ்ட் அணியில் டெண்டுல்கர் ஆடிய 4வது வரிசையில் யார் இறங்குவார் என்பது பற்றி முடிவு செய்யவில்லை. அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாதுதான்.

கன்ட்ரோல் பண்ணுவோம்

கன்ட்ரோல் பண்ணுவோம்

பந்துவீச்சில் கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்த முயற்சிப்போம். இது புதிய சீதோஷ்ண நிலை. இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தவை.

சுவாரசியமாக இருக்கும்

சுவாரசியமாக இருக்கும்

ஒரு நாள் போட்டி தரவரிசையில் நாங்கள் முதல் இடத்தில் உள்ளோம். டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. எனவே இந்த தொடர் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் என்றார்.

Story first published: Tuesday, December 3, 2013, 12:44 [IST]
Other articles published on Dec 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+