மட்ட மல்லாக்க கவிழ்ந்தது இந்தியா.. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்து வந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த அணியின் பேட்டிங் இந்த போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. இலங்கையின் பந்து வீச்சில் இந்தியா எளிதாக சுருண்டது.
அதேபோல் இலங்கையின் பேட்டிங்கும் நன்றாகவே இருந்தது. இந்திய அணியின் 113 ரன்கள் இலக்கை மிக எளிதாக இலங்கை எடுத்தது.

ரோஹித் கேப்டன்
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இந்த போட்டி டிசம்பர் மாத இறுதி வரை நடக்க இருக்கிறது.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. இந்த நிலையில் இன்று ஒருநாள் தொடர் ஆரம்பித்துள்ளது. இந்திய கேப்டன் கோஹ்லி ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மோசமான பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வரிசையாக அவுட் ஆனாங்கள். 11 பேரில் மொத்தம் மூன்று வீரர்கள் மட்டுமே 10 ரன்களுக்கு அதிகமாக எடுத்தார்கள். மொத்தம் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள்.டோணி மட்டுமே நிதானமாக சூழ்நிலையை உணர்ந்து ஆடினார். டோணி அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பந்து வீச்சு
இலங்கை அணியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இலங்கை வீரர் லக்மால் மிகவும் சிறப்பாக பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். நுவான் பிரதீப் 2 விக்கெட் எடுத்தார். மேலும் மற்ற பவுலர்களும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். பந்து வீசிய அனைவரும் விக்கெட் எடுத்து இருந்தார்கள். மொத்தமாக 13 மெய்டன் ஓவர்கள் வீசி கெத்து காட்டினார்கள்.

கெத்து பேட்டிங்
இந்த நிலையில் பவுலிங் போலவே இலங்கையின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. உபுல் தரங்கா அதிரடியாக 49 ரன்கள் எடுத்தார். இலங்கை வீரர்களின் அதிரடியால் 20.4 ஓவரில் இந்தியாவின் 113 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது. புவனேஷ்வர்குமார், பும்ரா, பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications