Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காஞ்சியை சுருட்டியது... அதைவிட மோசமாக சுருண்டது கோவை!

திருவெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் காஞ்சி அணியை 116 ரன்களுக்கு சுருட்டிய கோவை 102 ரன்களுக்கு சுருண்டது. இதனால் காஞ்சி அணிக்கு இந்த சீசனில் முதல் வெற்றி கிடைத்தது.

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.

first win for vb kanchi veerans in the tnpl third season

இதில் முதலில் விளையாடிய விபி காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் 41, எஸ். அருண் 29 ரன்கள் எடுத்தனர். கோவை அணியின் அஜித் ராம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கோவையின் அஸ்வின் வெங்கட்ராமன் 35, எம்.பி.ராஜேஷ் 21 ரன்கள் எடுத்தனர்.

காஞ்சி அணியில் தீபக் லிங்கேஷைத் தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார். திவாகர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் காஞ்சி அணி 14 ரன்களில் அபாரமாக வென்றது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், காஞ்சி அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

Story first published: Monday, July 30, 2018, 10:19 [IST]
Other articles published on Jul 30, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+