Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா!

அடிலெய்டு: உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்சின் டெண்டுல்கர் இல்லாத இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இதுவரை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை போட்டிகள் அத்தனையும் இந்தியா வெற்றி பெற சச்சின் முதுகெலும்பாக இருந்த நிலையில், அவரது இடத்தை ஈடுகட்டும் வீரர் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

முதல் போட்டியிலேயே மேன் ஆப் தி மேட்ச்

முதல் போட்டியிலேயே மேன் ஆப் தி மேட்ச்

இந்தியாவும், பாகிஸ்தானும் முதல் முதலில் 1992ம் ஆண்டு உலக கோப்பை தொடரில்தான் மோதலை ஆரம்பித்தன. சச்சினுக்கும் அதுதான் முதல் உலக கோப்பை தொடராகும். அப்போட்டியில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்த சச்சின், அமிர் சொகைல் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதும் சச்சினுக்கே கிடைத்தது. ஆஸி.யில் நடந்த அந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றபோதிலும், இந்தியாவிடம் பெற்ற தோல்வியை அவர்களால் மறக்க முடியவில்லை.

சச்சின் விளாசல்கள்

சச்சின் விளாசல்கள்

1996ல் நடந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 31 ரன்களும், 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக 45 ரன்களும் எடுத்து நங்கூரம் அமைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார் சச்சின் டெண்டுல்கர். 2003ல் நடந்த உலக கோப்பை இந்த வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் போன்ற பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தார் சச்சின். 75 பந்துகளில் அவர் அடித்த 98 ரன்கள், மிகப்பெரிய இலக்கை எளிதாக சேஸ் செய்ய உதவியது.

ஒருமுறை மிஸ்சிங்

ஒருமுறை மிஸ்சிங்

2007ல் மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலக கோப்பையில்தான், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதன்பிறகு 2011ல் மொகாலியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 85 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோர் அமைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார் சச்சின். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சச்சினை பார்த்ததுமே அதிரும்

சச்சினை பார்த்ததுமே அதிரும்

சச்சின் இந்திய அணியில் இருப்பதே பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களும், ஃபீல்டர்களுக்கும் கை நடுக்கத்தை ஏற்படுத்திவிடுவது வழக்கம். கடந்த உலக கோப்பையில் சச்சின் 85 ரன்கள் அடிப்பதற்குள் அவர் கொடுத்த 4 கேட்சுகளை பரிதாபமாக கைநழுவ விட்டனர் பாகிஸ்தான் ஃபீல்டர்கள். சச்சின் அடித்த பந்து வருகிறது என்றாலே அதை பிடிப்பதற்குள் பதற்றம் வந்துவிடும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் அது.

மகுடம் சூடப்போவது யார்?

மகுடம் சூடப்போவது யார்?

இந்நிலையில்தான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு முதல்முறையாக நாளை மறுநாள் பாகிஸ்தானை உலக கோப்பையில் எதிர்கொள்கிறது இந்தியா. இம்முறை சச்சினின் இடத்தை பிடித்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்போவது யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Friday, February 13, 2015, 13:50 [IST]
Other articles published on Feb 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+