தரமான சம்பவம் இருக்கு.. சென்னை சேப்பாக்கத்தில் எத்தனை உலக கோப்பை போட்டிகள் தெரியுமா?
சென்னை: ஐசிசி உலகக்கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதில் அக்.8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து ஐசிசி உலகக்கோப்பைக்கான அட்டவணை மற்றும் மைதான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 4வது முறையாக இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பைத் தொடர், 10 நகரங்களில் நடக்கவுள்ளது. இதற்காக மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, புனே, தரம்சாலா, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் அக்.8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்.14ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்.18ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
அதேபோல் அக்.23ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதியாக அக்.27ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சிறிதளவு சாதகமாக இருக்கும் சூழலில், ஆஃப்கானிஸ்தான் அணி இரு போட்டிகளில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications