Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவோட 5 டெஸ்ட் தொடர் சாத்தியமில்லை... சவுரவ் கங்குலி திட்டவட்டம்

டெல்லி : ஆஸ்திரேலியாவுடன் இந்த ஆண்டு இறுதியில் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடுவது சாத்தியமில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Why MS Dhoni has lot of haters in India

கடந்த மாதத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் இந்தியா-ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் தொடர் குறித்த திட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், வரும் நவம்பர் மாதத்தில் இந்திய அணியினர் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளதால் இது சாத்தியமில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.

வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள்

வீரர்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் போட்டிகள் அனைத்தும் ஏறக்குறைய முடங்கியுள்ள நிலையில், ஊரடங்கால் விளையாட்டு வீரர்களும் முடங்கியுள்ளனர். இந்நிலையில், தற்போது இசிபி உள்ளிட்ட போர்டுகள் தங்களது வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளன.

5 போட்டிகள் தொடர்

5 போட்டிகள் தொடர்

முன்னதாக கடந்த மாதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த தொடர் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் உறவு வலிமையானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சவுரவ் கங்குலி திட்டவட்டம்

சவுரவ் கங்குலி திட்டவட்டம்

இதனிடையே, இந்த தொடர் சாத்தியமில்லை என்றும், வரும் நவம்பரில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுவது சாத்தியமில்லை என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

காலநேரத்தை நீட்டிக்க வேண்டிய கட்டாயம்

காலநேரத்தை நீட்டிக்க வேண்டிய கட்டாயம்

ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி தொடரை மட்டுமே இந்திய அணி விளையாட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நேரத்தில் கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள 14 நாட்கள் தனித்திருத்தலையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஏற்கனவே சுற்றுப்பயணத்தின் காலநேரத்தை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, May 15, 2020, 16:35 [IST]
Other articles published on May 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+