Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக டெஸ்ட் போட்டி... 5 விக்கெட் சாதனை... 6வது இந்திய ஸ்பின்னராக அபாரம்!

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது.

இதில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அறிமுக வீரர் அக்சர் படேல் 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் துவங்கி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பம் முதலே இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

5 விக்கெட்டுகள் சாதனை

5 விக்கெட்டுகள் சாதனை

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் சாதனையை ரவி அஸ்வின் நிகழ்த்தினார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் ஸ்பின்னர் அச்கர் படேல் 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் இன்னிங்சிலும் அபாரம்

முதல் இன்னிங்சிலும் அபாரம்

முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத ஸ்பின்னர் அக்சர் படேல் இரண்டாவது போட்டியின்மூலம் தனது அறிமுக போட்டியில் பங்கேற்று விளையாடினார். முதல் இன்னிங்சில் முக்கியமான ஜோ ரூட் மற்றும் மொயீன் அலி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

6வது இந்திய ஸ்பின்னர்

6வது இந்திய ஸ்பின்னர்

இந்நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்சில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள 6வது இந்திய ஸ்பின்னர் என்ற பெருமையையும் அவர் தட்டி சென்றுள்ளார். முன்னதாக விவி குமார், திலிப் ஜோஷி, நரேந்திர ஹிர்வானி, அமித் மிஸ்ரா மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Story first published: Tuesday, February 16, 2021, 13:31 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+