Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளாஷ் பேக் 2015: இது கோஹ்லி ஆண்டு.. கூகுளில் முதலிடம்... அனைத்திலும் நம்பர் 1!

டெல்லி: 2015ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி . இதுவரை முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணியின் முன்கள வீரரும், அர்ஜென்டினா அணியின் கால்பந்தாட்ட கேப்டனுமான லயனல் மெஸ்சியை அவர் இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளார்.

விராட் கோஹ்லியை தேடுபவர்கள் அதிகமாகிவிட்டனர். அதற்கான காரணம் இல்லாமல் இல்லை. சண்டையோ சமாதானமோ கூடுதலாக எமோசனல் காட்டுவார் கோஹ்லி.

இப்போது அவர் பக்கம் காற்று வீசுகிறது இதனாலேயே டுவிட்டரில் இவரை பின்தொடர்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இவரைப்பற்றிய தகவல்களை தேடி தேடி படித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

கோஹ்லி நம்பர் 1

கோஹ்லி நம்பர் 1

தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அசத்தல் வெற்றி , பார்சிலோனா சூப்பர் ஸ்டாரை பின்னுக்குத் தள்ள விராட் கோஹ்லிக்கு உதவியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதனாலேயே அதிகம் கூகுளில் கோஹ்லியை தேடியுள்ளனர்.

சச்சின் நம்பர் 3

சச்சின் நம்பர் 3

இந்த பட்டியலில் 3வது இடம் சச்சினுக்கு. அமெரிக்காவில் நடந்த 'ஆல் ஸ்டார்ஸ்' கிரிக்கெட், சச்சின் பிரலபத்துக்கு இன்னும் உதவியாக இருப்பதாக தெரிகிறது.

டோணி நம்பர் 4

டோணி நம்பர் 4

ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டோணியின் தலைமை அதிகமாக விமர்சனத்திற்குள்ளானதும் டோணியின் பாப்புலாரிட்டி குறைவதற்கு காரணமாக அமைந்து விட்டது. இதனாலேயே அவர் பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரொனால்டோ நம்பர் 5

ரொனால்டோ நம்பர் 5

போர்ச்சுக்கல் கேப்டனும் ரியல்மாட்ரிட் ஸ்ட்ரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 5வது இடத்தை பெற்றுள்ளார். ரியல்மாட்ரிட் முக்கிய ஆட்டங்களில் தோல்வியை சந்திப்பது ரொனால்டோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 6வது இடத்தை பிடிக்கிறார். இந்தியர்கள் மத்தியில் ஃபெடரர் மீது தனி அன்பும் பற்றும் இருக்கிறதாம்.

சானியா மிர்சா 7

சானியா மிர்சா 7

சானியா மிர்சாவிற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என இரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் உள்பட 9 பட்டங்களை சானியா கைப்பற்றியது, அவரது பாப்புலாரிட்டியை அதிகரித்துள்ளதாம். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே கிரிக்கெட்டர் அல்லாத இந்திய விளையாட்டு நட்சத்திரம் சானியா மிர்சா.

ரோகித் - யுவராஜ்

ரோகித் - யுவராஜ்

அண்மையில் திருமணம் செய்த ரோகித் சர்மாவுக்கு 8வது இடம். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து காணமல் போய்விட்டதாக கருதப்படும் யுவாஜுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை. இவர் 9வது இடத்தை பிடித்துள்ளார். மாடலும் நடிகையுமான ஹசல் கீச்சுடன் யுவாஜுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட சமயத்தில் யுவராஜை கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு மவுசு

கிரிக்கெட்டுக்கு மவுசு

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நவோக் ஜோகோவிச், இந்த பட்டியலில் 10வது இடத்தை பெற்றுள்ளார். இப்போதெல்லாம் டென்னிஸ் வீரரை விட கிரிக்கெட் வீரர்களைத்தான் அதிகம் பேர் தேடி வருகின்றனர்.

டுவிட்டரிலும் பாலோயர்கள்

டுவிட்டரிலும் பாலோயர்கள்

சமீபகாலமாக மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சினுக்கு பிறகு டுவிட்டரில் அதிகம் பாளோ செய்யப்படும் வீரராக விராட் கோஹ்லி இருந்து வருகிறார். இந்நிலையில், மூன்றே மாதங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாளோயர்கள் கிரியேட் ஆனது விராட் கோஹ்லியின் புகழ் அதிகரித்து வருவதை காட்டியது.

80 லட்சம் பாலோயர்கள்

80 லட்சம் பாலோயர்கள்

இந்நிலையி்ல், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பாளோயர்களை கடந்து டுவிட்டரில் அதிகம் பாளோ செய்யப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். எப்படியோ விராட் கோஹ்லியை தேடுபவர்களும், பாலோ செய்பவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

Story first published: Thursday, December 17, 2015, 14:27 [IST]
Other articles published on Dec 17, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+