Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி20 அணியின் பொற்காலம்.. 2016ல் மறக்க முடியாத அந்த 5 போட்டிகள்!

டெல்லி: 2016ம் ஆண்டு டோணி தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு கனவு ஆண்டு என்றே சொல்லலாம். ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறிய இந்திய அணி, ஆசிய கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

டோணி அணி 21 டி20 போட்டிகளில் ஆடி அதில் 16ல் வெற்றி பெற்று அசத்தியிருந்தது. இதில் முத்திரை பதித்த 5 போட்டிகளை பாருங்கள்:

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலிய அணியை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வொயிட் வாஷ் செய்தது இந்திய அணி.

ஆஸ்திரேலியா அதிர்ச்சி

ஆஸ்திரேலியா அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதிலும் சிட்னியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில், ஆஸி. 197 ரன்களை விளாசியபோதிலும், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதை வென்று ஆறுதல் வெற்றியை கூட கொடுக்காமல் வொயிட் வாஷ் செய்ததை ரசிகர்கள் மறக்க முடியாது.

யுவராஜ்சிங்கின் சிக்சர்

யுவராஜ்சிங்கின் சிக்சர்

தட்டுத்தடுமாறியபடி இருந்த, யுவராஜ் சிங் கடைசி ஓவரில் சிக்சர் விளாசி போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததை அவரது ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். இதேபோல இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணியாக இருந்தாலும் அதன் சொந்த மண்ணில் அதை வீழ்த்துவது கஷ்டம்தான். அப்படித்தான் இந்தியாவின் இரண்டாம் கட்ட வீரர்களை அழைத்து சென்று, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்தியா.

அமெரிக்காவில் புது முயற்சி

அமெரிக்காவில் புது முயற்சி

அமெரிக்காவில் டி20 போட்டிகளை நடத்தி புதிய முயற்சியை செய்து பார்த்தது ஐசிசி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை இழந்தது இந்தியா. ஒரு போட்டியில் ரிசல்ட் வரவில்லை. பிராவோ பந்தில் டோணி அவுட்டாகி கைக்கு வந்த வெற்றி வாய்ப்பை பறி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 23, 2016, 12:47 [IST]
Other articles published on Dec 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+