Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான் ரீட்.. இப்ப தாத்தாவுக்கு வயசு 92.. ஆனா அந்த ஹேர்ஸ்டைலைப் பார்த்தீங்களா.. செம!

லண்டன்: நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜான் ரீட்.. இவரைப் பற்றி தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கும். ஆனால் இன்றைய கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வகையில் இவர் சூப்பர் முன்னோடி..!

விளையாட்டுத் திறமை மட்டுமல்ல.. அவரது ஹேர்ஸ்டைலும் கூட இன்றைய தலைமுறையினருக்கு மிகப் பெரிய முன்னோடியாக திகழ்ந்தவர் ஜான் ரீட்.

நியூசிலாந்து அணியின் மிகத் திறமையான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஸ்டீபன் பிளமிங்குக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த நியூசிலாந்து கேப்டன் ஜான் ரீட்தான்.

கேப்டன் ஜான் ரீட்

கேப்டன் ஜான் ரீட்

நியூசிலாந்தைச் சேர்ந்த ஜான் ரீட் கேப்டனாக மட்டுமல்லாமல் பின்னாளில் மேட்ச் ரெப்ரீயாகவும் பணியாற்றியவர். நியூசிலாந்து அணியின் கேப்டனாக 34 டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்த முதல் கேப்டனும் இவர்தான். உள்ளூரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 1956ம் ஆண்டும், அதேபோல 1962ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் வைத்து அந்த அணியையும் வென்றவர் ரீட்.

டெஸ்ட் கேப்டன்

டெஸ்ட் கேப்டன்

ஸ்டீபன் பிளமிங்குக்கு முன்பு, ரீட்தான் நியூசிலாந்து கேப்டன்களிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர். நம்பர் 1 கேப்டனான ஸ்டீபன் பிளமிங் 80 டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். ரீட், வெறும் கேப்டன் மட்டுமல்ல.. அருமையான வேகப் பந்து வீச்சாளர்.. பார்ட் டைம் விக்கெட் கீப்பர் என பல அவதாரம் எடுத்து கலக்கியவர். அதை விட முக்கியமாக இவரது ஹேர்ஸ்டைல். அந்தக் காலத்திலேயே கலக்கலான ஹேர்கட் மூலம் அசத்தலான ரசிகர்களைக் குவித்தவர் ரீட்.

ஸ்டைலிஸ்ட் கேப்டன்

ஸ்டைலிஸ்ட் கேப்டன்

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஹேர்ஸ்டைலைப் பாருங்களேன். இன்றைய இளைய தலைமுறை விரும்பி வைத்துக் கொள்ளும் இந்த ஹேர்ஸ்டைலை ரீட் அந்தக் காலத்திலேயே வைத்து அசத்தியுள்ளார். தலைமுறைகளையும் தாண்டி இந்த ஹேர்ஸ்டைல் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பது ஆச்சரியம் தருகிறது. ரீட் தெளிவான ஆட்டக்காரரும் கூட. தான் ஆடிய ஆட்டங்களில் நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.

நல்ல ஆல் ரவுண்டர்

நல்ல ஆல் ரவுண்டர்

நல்ல ஆல்ரவுண்டராக விளங்கிய ரீட், 58 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3428 ரன்களை எடுத்துள்ளார். அதில் 6 சதங்களும் அடக்கம். இவரது பேட்டிங் சராசரி 33.28 ஆகும். பந்து வீச்சில் 85 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் ஜான் ரீட். ஒரே ஒருமுறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார் ஜான் ரீட். ஸ்டைலிங் வீரராக மட்டுமல்லாமல் ஸ்டைல் ஐகானாகவும் விளங்கிய ரீட், சமீபத்தில் தனது 92வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

Story first published: Friday, June 5, 2020, 21:26 [IST]
Other articles published on Jun 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+