கேப்டன் பதவியில் இருந்து பிளமிங் ராஜினாமா
கிங்ஸ்டன்:நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்தது.
![]() |
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிளமிங் தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பெறுப்பில் இருந்து விலகுகிறேன். டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நீடிக்க விரும்புகிறேன் என்றார்.
கடந்த பத்து ஆண்டுகளாக கேப்டன் பதவியில் இருந்த பிளமிங் பல வெற்றிகளை நியூசிலாந்து அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை மூன்று உலககோப்பை போட்டியில் கேப்டனாக இருந்த பிளமிங் இருமுறை தனது அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றுள்ளார்.
இவரின் ராஜினாமா நியூசிலாந்து அணிக்கு பெறும் இழப்பாகும்.
ராஜினாமா முடிவை உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பே எடுத்துவிட்டதாக பிளமிங் கூறியுள்ளார்.
தான் கேப்டன் பெறுப்பில் இருந்து விலகினால் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதற்காக தனது முடிவை போட்டிகள் முடியும் வரை வெளியிடமால் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளார் பிளமிங்.
இந்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் தூணக இருந்த இன்சமாம் லீக் போட்டியில் அயர்லாந்திடம் அடைந்த மோசமான தேல்வியால் ஒருநாள் போட்டியில் இருந்தே விலகினார்.
அதேபோல மேற்கிந்திய தீவுகள் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் லாராவும் அரையிறுதி போட்டியில் அடைந்த தேல்வியால் ஒருநாள் போட்டியிலிருந்து, டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
