
தோனிக்கு பலம் அதிகம்
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பிளெம்மிங்-கிடம் தோனிக்கு டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவதை குறித்து கேட்ட போது, "தோனியை இந்திய அணியில் சேர்க்க பல வாய்ப்புகள் உள்ளன. காரணம், அவருடைய பலம் அளப்பரியது. கடந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது" என கூறினார்.

ஒருநாள் போட்டிகளில் தோனி
2018 ஐபிஎல் தொடரில் தோனி ரன் குவித்து கலக்கினாலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி தடுமாறி வருகிறார். அதன் காரணமாகவே தோனிக்கு டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

நம்பிக்கை மட்டும் வேண்டும்
அது குறித்து பேசிய பிளெம்மிங், "ஒருநாள் போட்டிகளிலும் தன்னால் ஐபிஎல் போல ஆட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தோனிக்கு வேண்டும். உலகக்கோப்பையில் ஆடவே தோனி விரும்புகிறார் என நினைக்கிறேன்" என கூறினார்.

தோனி இடம் பெறுவாரா?
தோனி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை தோனியின் பெயர் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை என்றால் அவர் உலகக்கோப்பையில் ஆடுவது கடினமே.