Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்னாலே என்னாளும் என் ஜீவன் வாழுதே... புகைப்படத்தில் காதல் சொன்ன சஹல்

சிட்னி : யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா ஆகியோரின் காதல் கதை நமக்கெல்லாம் தெரிந்ததே. இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

கடந்த ஐபிஎல் 2020 தொடரில் யூஏஇ வந்த தனஸ்ரீ தன்னுடைய வருங்கால கணவரின் போட்டிகளில் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தினார்.

Follow You Till The End: Yuzvendra Chahal Posts Adorable Photo With Fiancee Dhanashree Verma

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சஹல், தனஸ்ரீ உடன் தான் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இறுதி வரை உடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் 2020 சீசனில் ஆர்சிபி அணி வீரர் யுஸ்வேந்திர சஹல் 15 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணி எலிமினேட்டர் சுற்றில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. ஆயினும் சஹலின் செயல்பாடுகள் பாராட்டை பெற்றன. தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சஹல் இடம்பெற்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வருங்கால மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தான் அவருடன் நடைபோடுவேன் என்றும் இறுதிவரை தொடர்வேன் என்றும் அவர் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்களின் லைக்குகளை குவித்துள்ளது.

Story first published: Wednesday, November 25, 2020, 10:50 [IST]
Other articles published on Nov 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+