Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK VS RCB: பெங்களூரை கலாய்த்து நெட்டிசன்கள் தெறிக்க வைத்த மீம்ஸ்கள்

சென்னை:ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி ஜெயித்ததை தொடர்ந்து, இணையத்தை மீம்ஸ்கள் ஒரு கலக்கு கலக்கு வருகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள், சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு பெங்களூரு சுருண்டது.

விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தவிர, கேப்டன் கோலி உள்பட மற்ற வீரர்கள் சிங்கிள் டிஜிட்டில் ரன்களை எடுத்தனர். ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

சென்னைக்கு பாராட்டு

சென்னைக்கு பாராட்டு

இதன்மூலம் பெங்களூருக்கு எதிரான வெற்றிகளில் தனது எண்ணிக்கையை 7ஆக சென்னை அணி உயர்த்தி இருக்கிறது. அதே நேரத்தில் வெற்றி கணக்கை தொடங்கிய சென்னைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இணையத்தில் கிண்டல்

இணையத்தில் கிண்டல்

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தை கிண்டலடிக்கும் வகையில் ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றில் ரசிகர்கள் பலர் தங்களது சொந்த கற்பனைகளை அருமையாக உலவ விட்டுள்ளனர்.

கமலை வைத்து கலாய்

விமல் என்பவர் பதிவிட்டுள்ள மீம்ஸ் ஏக சிறப்பு. கமலின் அன்பே சிவம் படத்தின் ஒரு காட்சியை வைத்து ஆர்சிபியை பார்த்து பிழைத்து போங்க என்ற காட்சியை வைத்து கலாய்த்துள்ளார்.

உலா வரும் மீம்ஸ்

உலா வரும் மீம்ஸ்

சமூக வலைத்தளங்களில் இரு அணிகளில் ரசிகர்களின் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த முறை RCB மிக மோசமாக தோற்றதால் அவர்களை விமர்சித்து பல மீம்கள் உலா வருகின்றன.

டுவிட்டரில் பதிவு

பிரபல நடிகரும், பாடகி சின்மயியின் கணவருமான, ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் ஒரு மீம் பதிவிட்டு பெங்களூரு அணியை கலாய்த்துள்ளார்.

உதவும் வடிவேல்

இதேபோன்று ரசிகர்கள் பலரும் அவரவர் கற்பனைக்கு எட்டியவாறு மீம்சுகளை தெறிக்கவிட்டுள்ளனர். அதிலும், சுகு என்பவரது பெயரில் வெளியாகி இருக்கும் மீம்சில் வடிவேலை வைத்து கலாய்த்து தள்ளிவிட்டுள்ளனர்.

கார்ட்டூன் கலக்கல்

வோஹ்ரா என்பவர் கார்ட்டூன்கள் உதவியுடன் கலாய்த்து இருக்கிறார். அவரது இந்த பதிவுக்கும் வரவேற்பு அதிகம்.

கலக்கும் காமெடி

அதேபோன்று பிவேந்திரா என்பவரது மீம்சுகளில் முழுக்க.. முழுக்க வடிவேலுதான். திரைத்துறையில் வாய்ப்புகள் இன்றி இருக்கும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் தான் கிரிக்கெட் ரசிகர்களின் கலாய் மீம்சுகளுக்கு கை கொடுக்கின்றன.

Story first published: Sunday, March 24, 2019, 14:35 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+