நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்... சஹல் ஹாப்பி அண்ணாச்சி!
மும்பை : இந்திய அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹலின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இனிதே நடந்தேறியது
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சஹல் மற்றும் நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மாவின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அவர் நேற்றைய தினம் தனஸ்ரீயை கரம்பிடித்தார்.
இதையொட்டி இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை சஹல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனஸ்ரீ வர்மாவை மணந்தார்
இந்திய அணியின் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் நடன இயக்குநர் தனஸ்ரீ வர்மாவை நேற்றைய தினம் மணமுடித்துள்ளார். இதையொட்டி அவர் தனஸ்ரீயுடன் உள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்திய ஸ்பின்னர்
ஐபிஎல் 2020யில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹல், சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்தார். 15 போட்டிகளில் விளையாடிய அவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். மேலும் அவரது பந்துவீச்சின் எகானமி ரேட் ஓவருக்கு 7.08ஆக இருந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் பங்கேற்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

யூஏஇ சென்ற தனஸ்ரீ
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சஹலுக்கும் தனஸ்ரீக்கும் இடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் அந்த மாதத்திலேயே அவர் தனது ஐபிஎல் பயணத்தை மேற்கொண்டார். தொடர்ந்து தனஸ்ரீயும் யூஏஇக்கு சென்று சஹலின் போட்டிகளின்போது அவரை உற்சாகப்படுத்தினார்.

புகைப்படங்கள் பதிவு
இந்நிலையில் நேற்றைய தினம் இருவருக்கும் இடையில் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவர் புகைப்படங்களை பதிவிட, வாழ்த்து மழையில் நனைந்தார். லைக்குகளும் அள்ளியது. எப்போதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக காணப்படும் சஹலை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications