Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள் இதயத்தில் எப்போதும் இருப்பார்... டீன் ஜோன்சிற்கு சிறப்பாக அஞ்சலி செலுத்திய பிஎஸ்எல்!

கராச்சி :ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கடந்த செப்டம்பர் மாதத்தில் மும்பையில் ஐபிஎல் வர்ணனைக்காக வந்திருந்தபோது உயிரிழந்தார்.

அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகளவில் அவருக்கு அனைத்து வீரர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் துவக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ப்ளே-ஆப் சுற்றின் போட்டிக்கு முன்னதாக டீன் ஜோன்சிற்கு பிரத்யேக முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனைத்து தரப்பினர் அஞ்சலி

அனைத்து தரப்பினர் அஞ்சலி

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் வர்ணனைக்காக மும்பை வந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பு வீரர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரத்யேக அஞ்சலி

பிரத்யேக அஞ்சலி

இந்நிலையில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நேற்று மீண்டும் துவங்கப்பட்டுள்ள பிஎஸ்எல் ப்ளே-ஆப் சுற்றின் முதல் போட்டியில் பங்கேற்ற கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் இணைந்து மறைந்த டீன் ஜோன்சிற்கு பிரத்யேகமான முறையில் அஞ்சலி செலுத்தினர்.

பிஎஸ்எல் வீரர்கள் அஞ்சலி

இரு அணிகளும் இணைந்து மைதானத்தில் போட்டி துவங்குவதற்கு முன்னதாக டீன் ஜோன்ஸ் பெயரின் முதல் எழுத்தை குறிப்பிடும்வகையில் 'டி' என்ற வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜோன்ஸ் தங்களது இதயங்களில் எப்போதும் வாழ்வார் என்று பிஎஸ்எல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

புகைப்படம் பகிர்வு

இதனிடையே, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் கராச்சி கிங்ஸ் அணியின் இடைக்கால பயிற்சியாளர் வாசிம் அக்ரமும் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டீன் ஜோன்சின் புகைப்படத்தை பகிர்ந்து அவரை தங்களது அணி பெருமை கொள்ள வைக்கும் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, November 15, 2020, 16:28 [IST]
Other articles published on Nov 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+