ஆஷஸ் வெற்றிக்கு அவர் மட்டும் காரணம்னு ஏன் பாராட்டுறீங்க..? இந்த லிஸ்டை பாருங்க.. உங்களுக்கே தெரியும்
கேன்பரா: ஆஷஸ் வெற்றி ஸ்மித்தை மட்டும் சேர்ந்தது அல்ல, பந்து வீச்சாளர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா கலக்கி வருகிறது. 4 போட்டிகளில் 2ல் வென்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி பாக்கி இருக்கிறது. அதில் வெற்றி பெற்று பெற்றுவிட்டால், ஆஷஸ் கோப்பையை தக்கவைத்து கொள்ளலாம்.
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா கலக்கி வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது நட்சத்திர வீரர் ஸ்மித். தடை முடிந்து அணிக்கு திரும்பி இருக்கும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாராட்டுகள்
3 டெஸ்டில் ஐந்து இன்னிங்சில் 3 சதங்கள் உள்பட 671 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 134.20. ஆஷஸ் கோப்பையை தக்க வைக்க ஸ்மித்தின் பேட்டிங் தான் முக்கிய காரணம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பவுலர்கள் பங்கு
ஆனால், முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மட்டும் அந்த கருத்துகளில் இருந்து மாறுபட்டிருக்கிறார். ஸ்மித் மட்டும் பாராட்டுக்குரியவர் அல்ல, அணியின் பவுலர்களின் பங்களிப்பும் அதில் இருக்கிறது என்று கூறி உள்ளார்.

சில விஷயங்கள்
அவர் கூறியிருப்பதாவது: ஸ்டீவ் ஸ்மித் என்ற வீரரால் மட்டும் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவரின் பேட்டிங் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன.

பவுலிங் அற்புதம்
ஒட்டுமொத்த பவுலிங் யூனிட்டும் அபாரமாக விளையாடி, அற்புத பந்து வீச்சை வெளிப்படுத்தி உள்ளனர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சு நன்றாக இருந்தது என்றார்.

ஜீனியஸ்
ஸ்மித்தை பற்றி பாண்டிங் இப்படி கூறியிருக்கிறார் என்றால் அது ஏதோ அணிக்குள் உள்ள புகைச்சல் என்றில்லை. இரட்டை சதம் அடித்து ஸ்மித் கலக்கிய போது, அவர் ஒரு ஜீனியஸ் என்று பாண்டிங் புகழ்ந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications