ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து புயல்.. ஓய்வு பெற்றார் முன்னாள் சிஎஸ்கே வீரர்!
சென்னை: முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டாக் போலிங்கர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் இவர் ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் 2009 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகம் ஆனார். தற்போது இவருக்கு 36 வயது ஆகிறது.

இவர் இதுவரை 12 டெஸ்ட், 39 ஒருநாள் மற்றும் 9 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் 2014 வரைதான் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக விளையாடினார்.
அதன்பின் வரிசையாக பாரமின்றி தவித்தார். உடலில் காயங்கள் வேறு ஏற்பட்டு இருந்தது. இவர் ஐபிஎல், பிக் பாஷ் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடினார்.
ஐபிஎல் போட்டியில் இவர் சென்னை அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் மிகவும் நன்றாகவே பந்து வீசினார்.
தற்போது இவர் ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து கிரிக்கெட் சம்பந்தமான மற்ற பணிகளில் செயல்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications