Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வடிவேலு பாணியில் நடத்தப்பட்ட கடத்தல்... கத்திமுனையில் கடத்தி அடித்து துவைத்த கடத்தல்காரர்கள்

சிட்னி : முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஸ்டூவர்ட் மேக்கில் கடந்த மாதத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது வீட்டில் வைத்து அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஒருமணிநேரம் அவரை அடித்து துவைத்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மேக்கில்

முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மேக்கில்

முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஸ்டூவர்ட மேக்கில், கடந்த 1998ல் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகி 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த 2008ல் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஸ்டூவர்ட் கடத்தல்

ஸ்டூவர்ட் கடத்தல்

அதன்பின்பு மீண்டும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பிக் பாஷ் லீக் தொடரில் 2011 வரை விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் வீழ்த்தியுள்ளார் ஸ்டூவர்ட். இதனிடையே கடந்த மாதம் 14ம் தேதி க்ரெமானில் அவருடைய வீட்டிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

4 பேர் கைது

4 பேர் கைது

அவரை கடத்திய கடத்தல்காரர்கள் அவரை ஒருமணிநேரம் அடித்து துவைத்துவிட்டு பின்பு பெல்மோர் பகுதியில் ரிலீஸ் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 27, 29, 42 மற்றும் 46 வயதுடைய 4 பேர்களை இன்று காலை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சுதர்லாந்து, காரிங்பா, பிரிங்டன் லே-சாண்ட்ஸ், பாங்க்சியா மற்றும் மாரிக்வில்லே ஆகிய பகுதிகளில் சோதனை வாரண்ட் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் வீரர்கள் கேள்வி

முன்னாள் வீரர்கள் கேள்வி

இரவு 8 மணியளவில் வீட்டில் துப்பாக்கி முனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளது சிட்னியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தின் பாதுகாப்பு இதன்மூலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, May 5, 2021, 12:43 [IST]
Other articles published on May 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+