யுவராஜ் சிங் மாதிரி, எனக்கும் கேன்சர்..! பிரபல கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்.. ரசிகர்கள் ஷாக்
கேன்பரா: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தமக்கு கேன்சர் இருப்பதாக தெரிவித்துள்ள விவரம், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2011ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம்பெற்று இந்தியா சாம்பியன் ஆக முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அதிரடி மன்னனான அவர், உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றவர்.
அதன்பிறகு, ஒரு காலகட்டத்தில் கேன்சரால் அவதியுற்றார். பல்வேறு சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டார். மேல்சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு குணமடைந்து சொந்த நாடு திரும்பினார்.

ஓய்வு அறிவிப்பு
பின்னர் ஒரு கட்டத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது கனடா டி 20 லீக்கில் விளையாடி வருகிறார். அவருக்கு கேன்சர் என்ற போது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் அதிர்ந்து போயினர்.

சரும கேன்சர்
அப்படி ஒரு நிலை தான் இப்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும், அந்நாட்டு ரசிகர்களுக்கும். அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குக்கு கேன்சர். 38 வயதான மைக்கேல் கிளார்க் தோல் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் கேன்சர்
இது முதல் முறை அல்ல. 2006ம் ஆண்டில் தோல் கேன்சர் இருந்ததை கண்டறிந்த அவர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். தற்போது நெற்றிப் பகுதியில் மீண்டும் தோல் கேன்சர் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையின் மூலம் சரிசெய்து அவர் தற்போது புருவத்திற்கு மேலாக தையல் போடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அக்கறை தேவை
தனக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டதாகவும் அதனை நெற்றியில் இருந்து அகற்றி விட்டதாகவும் பதிவிட்டுள்ளார். இளைய தலைமுறையினர் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் போதிய அக்கறை தேவை என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications