Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதல் மன்னனாக மாறிய ஆஸி. வீரர் மைக்கேல் கிளார்க்.. நண்பனின் மனைவியுடன் டேட்டிங்..3வது காதலிக்கு விடை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது 4வது காதலியுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

ரிக்கி பாண்டிங்கிற்கு பிறகு, ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கிய கிளார்க், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

கிரிக்கெட் விளையாடும் காலத்திலேயே மைக்கேல் கிளார்க், வசிகரமான தோற்றத்தை கொண்டவர். அவருக்கு நிறைய தோழிகள் இருந்தனர்.

முதல் காதல்

முதல் காதல்

மைக்கேல் கிளார்க், முதல் முதலாக லாரா வொர்த்திங்டன் என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால் கிளார்க், வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த லாரா வொர்த்திங்டன்,கடந்த 2010ஆம் ஆண்டு கிளார்க்கை விட்டு பிரிந்தார்.

மனைவியுடன் விவகாரத்து

மனைவியுடன் விவகாரத்து

இதனையடுத்து மைக்கேல் கிளார்க் கெயில் போட்லி என்ற பெண்ணை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டார். சுமார் 7 ஆண்டுகள் இந்த ஜோடி திருமண பந்தத்தில் நீடித்தது. இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது மனைவியை கிளார்க் விவகாரத்து செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மூன்றாவது காதல்

மூன்றாவது காதல்

இதனைத் தொடர்ந்து மைக்கேல் கிளார்க், ஆடை வடிவமைப்பாளரான பிப் எட்வர்ட்ஸ் உடன் டேட்டிங் செய்ய தொடங்கினார். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஆனால், இந்த காதல் ஒரு ஆண்டு கூட நீடிக்கவில்லை. இதனையடுத்து இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தற்போது 41 வயதில், கிளார்க், தனது 4வது காதலியை கண்டுபிடித்துள்ளார்.

நண்பனின் மனைவி

நண்பனின் மனைவி

இம்முறை, தனது நெருங்கிய நண்பனான டிராவி பாக்கனின் மனைவியான ஜேட் யார்புரோக்குடன் நட்பாக பழக ஆரம்பித்த கிளார்க், தற்போது அவருடன் டேட்டிங் செய்ய தொடங்கி விட்டார். இருவரும் ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி, இன்ப சுற்றுலாவும் செல்ல தொடங்கிவிட்டனர். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, July 23, 2022, 20:23 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+