Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விமானத்தில் சக பயணிகளை சீண்டிய பிரபல முன்னாள் வீரர்..! கீழே இறக்கிவிட்டு மறுவேலை பார்த்த நிர்வாகம்

சிட்னி:ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் 1993ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியவர். 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

Former australian cricket player michael slater kicked off plane

ஐபிஎல்லில் கூட வர்ணனையாளராக இருந்தார். வரவுள்ள உலக கோப்பைக்கான வர்ணனையாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து சொந்த ஊரான வாகா வாகாவிற்கு செல்லும் விமானத்தில் பக்கத்தில் ஏறிய அவர், அருகில் இருந்த பெண்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்து சென்று பாத்ரூமிற்குள் சென்று பூட்டி விட்டு, வெளியேவர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து ஸ்லாட்டர் இறக்கிவிடப்பட்டார்.

சக பெண் பயணிகளிடம் காரசாரமான வாதம் செய்தது உண்மை தான் என்றும், அது சக பயணிகளுக்கு தொல்லையாக இருந்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 21, 2019, 18:41 [IST]
Other articles published on May 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+