எவ்வளவு லக்கி நீங்க... உயரமானவருடன் விளையாட போறீங்க - பார்த்திவை வம்பிழுத்த டீன் ஜோன்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம்வீரர் பார்த்திவ் படேலின் உயரம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கேலி பேசியுள்ளார். அவருக்கு பார்த்திவ் படேலும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆர்சிபியில் புதிதாக இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆரன் பின்ச்சுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ள பார்த்திவ் படேல் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றும் பார்த்திவ் படேலைவிட பின்ச் அதிக உயரம் கொண்டவர் என்றும் டீன் ஜோன்ஸ் தனது டிவிட்டர் மூலம் கேலி பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் பேசிய பார்த்திவ் படேல், ஆரன் பின்ச்சுடன் இணைந்து விளையாட தான் ஆவலுடன் உள்ளதாகவும், டீன் ஜோன்சை போலல்லாமல் அவர் அதிக நாட்களை தனது நாட்டில் செலவழித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த கிறிஸ்துமசுக்காவது டீன் ஜோன்ஸ் தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்கு கடவுளுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

3 வீரர்களை ஏலம் எடுக்க ரூ.8.60 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் 2020க்கான ஏலத்தில் ஆரன் பின்ச், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் ஜோசுவா பிலிப் ஆகிய வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்காக 8.60 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

உயரம் குறித்து வம்பிழுத்த டீன் ஜோன்ஸ்
ஆர்சிபி அணியை சேர்ந்த பார்த்திவ் படேல் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்நிலையில் அவரது உயரத்தை வைத்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் அவரை வம்புக்கிழுத்துள்ளார்.
உயரமானவரோட விளையாட போறீங்க...
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பேசியுள்ள டீன் ஜோன்ஸ், ஆர்சிபியில் புதிதாக இணைந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆரன் பின்சுடன் விளையாட உள்ள பார்த்திவ் படேல் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றும், அவருடைய வாழ்க்கை எளிதாக மாறப்போவதாகவும், பார்த்திவை விட பின்ச் உயரமானவர் என்றும் வம்பிழுத்துள்ளார்.
கடவுளுக்கு நன்றி தெரிவித்த பார்த்திவ்
டீன் ஜோன்சின் இந்த பதிவிற்கு பார்த்திவ் படேல் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். டீன் ஜோன்சை போலல்லாமல் தன்னுடைய நாட்டிலேயே அதிக நாட்களை செலவழிக்கும் ஆரன் பின்ச்சுடன் தான் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், இந்த கிறிஸ்துமசுக்காவது தன்னுடைய நாட்டிற்கு டீன் ஜோன்ஸ் செல்வதற்கு தான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications