இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மேத்யூ ஹைடன்
டெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இந்தியாவின் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்தியாவின் 71வது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக இலங்கையில் உள்ள இந்திய வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இந்நிலையில், ஐபிஎல், டிஎன்பிஎல். உள்ளிட்ட கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவில் அதிகமாக தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், இந்திய தேசிய கீதம் பாடலை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்தார். தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து May the ruler of the hearts of all people.... என்று டுவிட்டரில் பதிவேற்றம் செய்தா. சில நிமிடங்களிலேயே மேத்யூவுக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.


Click it and Unblock the Notifications