Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோகம்.. ஆஸி.,யின் நம்பர்.2 ஸ்பின்னர்.. "ஒரேயொரு" சம்பவம்.. ஹோட்டலை மூடும் பரிதாபம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான மெக்கில் வாழ்க்கையில் தற்போது சோக மேகங்கள் சூழ்ந்துள்ளன.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

சிட்னி நகரின் வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கொண்டு சென்ற 4 பேரும், அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒருமணிநேரம் மெக்கில்லை கடுமையாகத் தாக்கிய மர்ம நபர்கள், அவரை பெல்மோர் எனும் பகுதியில் கொண்டுவந்துவிட்டு தப்பியோடினர்.

பெரும் தொந்தரவு

பெரும் தொந்தரவு

இதுகுறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீஸாரிடம் மெக்கில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 4 பேரை கடந்த மே மாதம் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது, மெக்கில் மற்றும் அவரது பார்ட்னர் மரியா ஓ'மீகர் ஆகியோர் சிட்னியில் ஐந்து ஆண்டுகளாக உணவகம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த சூழலில், அவர்களது உணவகத்தின் நில உரிமையாளர் அவர்களின் கட்டிடத்தை கைப்பற்றி ஏகப்பட்ட தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

வாடகை உயர்வு

வாடகை உயர்வு

இதுகுறித்து மெக்கில் கடத்தல் வழக்கை விசாரித்த போலீசார் கூறுகையில், "மெக்கில் இந்த சம்பவத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. உணவகத்தை நடத்தி வந்த இருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர், எனவே Aristotle's Neutral Bay உணவகத்தை மூட முடிவு செய்தனர். வாடகை உயர்வு மற்றும் அப்பகுதியின் மோசமான வணிக நிலைமைகளின் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தனர்" என்றனர்.

எவ்வளவோ முயற்சித்தோம்

எவ்வளவோ முயற்சித்தோம்

இதுகுறித்து பேஸ்புக் பதிவில் விளக்கம் அளித்த மெக்கில், "தற்போது நிலவும் கொரோனா சிக்கல் காரணமாக, வாடகை குறைப்பு அல்லது விலக்கு குறித்து நில உரிமையாளருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாட்டில் கொரோனா தாக்கம் முடிந்துவிட்டது என்று நம்பி, நில உரிமையாளர் வாடகையை அதிகரிக்க விரும்பினார், எனவே வணிகத்தை நிறுத்துவதே ஒரே வழி என்று முடிவு செய்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷேன் வார்னே அடுத்தபடியாக

ஷேன் வார்னே அடுத்தபடியாக

44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 2-வது இடத்தில் மெக்கில் உள்ளார். ஆனால், கிரிக்கெட்டுக்கு பிறகான அவரது வாழ்க்கை தற்போது சிக்கலில் உள்ளது.

Story first published: Friday, June 4, 2021, 11:24 [IST]
Other articles published on Jun 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+