Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவுரவ் கங்குலி எடுத்த புதிய அவதாரம்.. ஐபிஎல்-ல் கிடைத்த உச்சபட்ச பதவி.. ரசிகர்கள் வாழ்த்து மழை!

மும்பை: பிசிசிஐ-ல் இருந்து புறகணிக்கப்பட்ட முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தொடரில் பெரிய பதவியை கொடுத்து ஆச்சரியம் கொடுத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம்.

இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் வீரராக இருந்த சவுரவ் கங்குலி, பிசிசிஐ-ன் தலைவராக கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் அவர் பதவி விலகினார்.

இதனையடுத்து ஐசிசி-ன் தலைவர் பதவிக்காக பிசிசிஐ சார்பில் கங்குலி தேர்தலில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பிசிசிஐ அதிகாரிகள் அவரை கைவிட்டனர். அவர் பதவிக்கு வர விருப்பமில்லை என கூறிவிட்டனர்.

 புது அவதாரம்

புது அவதாரம்

இந்நிலையில் அவர் தனது அடுத்த அவதாரத்தை ஐபிஎல் தொடர் மூலம் எடுக்கவுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒட்டுமொத்த நிர்வாக இயக்குநராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஐபிஎல் உயர்மட்ட குழுவில் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை புறக்கணித்தார். இந்த சூழலில் தான் தற்போது டெல்லி அணியுடன் இணைந்துள்ளார்.

பழைய கூட்டணி

பழைய கூட்டணி

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல்-ன் போது டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி செயல்பட்டிருந்தார். அப்போது கங்குலி, ரிக்கிப் பாண்டிங், ஸ்ரேயாஸ் ஐயரின் கூட்டணியில் 3வது இடத்தை பிடித்து அசத்தியிருந்தது. தற்போது பாண்டிங் மற்றும் கங்குலி மீண்டும் கூட்டணி அமைக்கவிருக்கின்றனர். இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் மட்டுமே அல்ல

ஐபிஎல் மட்டுமே அல்ல

கங்குலி வெறும் ஐபிஎல்-ல் மட்டும் பணியாற்றபோவதில்லை. துபாயில் நடைபெறும் ஐஎல்டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரிலும் டெல்லி நிர்வாகம் முதலீடு செய்துள்ளது. எனவே அந்த தொடர்களில் உள்ள அணிகளின் பணிகளையும் சவுரவ் கங்குலி மேற்பார்வை செய்வார் எனத்தெரியவந்துள்ளது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய அவருக்கு, அட்டகாசமான பதவி கிடைத்திருப்பதாக ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

புது கேப்டன்

புது கேப்டன்

இது ஒருபுறம் இருக்க, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் குணமடைய 4 - 5 மாதங்கள் வரை ஆகும் என்பதால் ஐபிஎல்-ஐ தவறவிட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, January 3, 2023, 17:58 [IST]
Other articles published on Jan 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+