Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் சன்ஸ்கீரின் லோஷன்.. அப்புறம் உப்புத்தாள்…!! இப்படித் தான் பந்தை சேதப்படுத்தினோம் ….!!

லண்டன்:இங்கிலாந்துமுன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், பந்தை சேதப்படுத்தியதாக பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது ஒப்புக்கொண்டு இருப்பது, கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்தாண்டு, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு பந்தை சேதப்படுத்தியதற்காக சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர், பந்தை சேதப்படுத்தியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தான் எழுதிய தி புல் மாண்டி என்கிற புத்தகத்தில் இதனை குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

முதன்மையான வேலை

முதன்மையான வேலை

எப்போதும் பந்தின் நிலையை மாற்ற வேண்டும் என்று உறுதியாய் இருப்போம். இங்கிலாந்து அணியில் சேர்ந்த போது எனது முதன்மையான வேலையே பந்தின் நிலையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதுதான்.

பந்து ஈரம்

பந்து ஈரம்

அப்போது என்னிடம் சில வீரர்கள், வியர்வையான கைகளை பந்தின் வழவழப்பான பகுதியில் வைக்கக்கூடாது என்றனர். பந்தை ஈரமாக வைத்தால் தான் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.

சன்ஸ்கீரின் லோஷன் தேய்ப்பு

சன்ஸ்கீரின் லோஷன் தேய்ப்பு

மேலும் பந்து ஈரமாக இருந்தால் ரிவெர்ஸ் ஸ்விங் செய்ய, வசதியாக இருக்கும்.எனவே, பந்தில் சன்ஸ் ஸ்க்ரீன் மற்றும் மிண்ட்ஸ் ஆகியவற்றை தேய்த்து பந்தை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றாற்போல மாற்றி இருக்கிறேன்.

ஐசிசி விதி என்ன?

ஐசிசி விதி என்ன?

சில சமயம் பந்தை பேண்ட் பாக்கெட்டில் உள்ள ஜிப்பில் போட்டு தேய்த்து பந்தை ஸ்விங் செய்ய சேதப்படுத்தி இருக்கிறேன் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஐசிசி விதிப்படி வீரர்கள் பந்தை வழவழப்பாக்கலாம். ஆனால் அதற்காக செயற்கையாக எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது. இந்த விதியை வைத்து பார்க்கும் போது மான்டி பனேசர் பந்தை சேதப்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

Story first published: Sunday, May 26, 2019, 16:31 [IST]
Other articles published on May 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+