அப்போ… ஏக தேசமா இந்தியாவின் கோச் இவருதானா..? பரபரப்பை கிளப்பிய கடைசி நேர டிவிஸ்ட்..!!
மும்பை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் சுனில் ஜோஷி விண்ணப்பித்திருக்கிறார்.
உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உள்ளிட்ட அனைவரின் பதவிக் காலமும் முடிந்து விட்டது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி உள்ளதால், அனைவரின் பதவிக்காலமும் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு விட்டது.
அதே நேரத்தில், புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பல பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. விண்ணப்பிக்கும் காலக் கெடுவும் ஜூலையுடன் முடிந்து விட்டது. யார்? யார்? என்ன பதவிக்கு போட்டியிடுகின்றனர் என்பது குறித்து யூக தகவல்கள் வெளியாகின.

சுனில் ஜோஷி விண்ணப்பம்
கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறி யிருக்கின்றன. இந்நிலையில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி, பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். சுனில் ஜோஷி ஏற்கெனவே வங்கதேச அணிக்கு இரண்டரை ஆண்டுகாலம் பயிற்சியாளராக இருந்து அனுபவம் பெற்றவர்.

காத்திருக்கும் சவால்
இதனை அவரே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்திருக்கிறேன். வங்க தேசத்துக்காக இரண்டரை ஆண்டுகள் பயனுள்ள பயிற்சிக்காலத்திற்குப் பிறகு அடுத்த சவாலுக்கு நான் காத்திருக்கிறேன்.

பரிசீலனை
கொஞ்ச காலமாக இந்திய அணியில் ஸ்பின் பவுலிங்குக்கு என சிறப்பு பயிற்சியாளர் இல்லை. இந்த தருணத்தில் எனது அனுபவம் பரிசீலிக்கப்படலாம். பெரும்பாலான அணிகள் வேகப்பந்து வீச்சாக இருந்தாலும் ஸ்பின்னாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்தவர்களை பணிக்காக வைத்திருக்கின்றனர்.

அணிக்கு தேவை
இந்திய அணிக்கும் ஒருவர் தேவை. அது நானாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஸ்பின் கோச் கட்டாயம் தேவை.

அப்படி என்றால் தவறு
எந்த ஒரு சர்வதேச அணியும் ஸ்பின் கோச் தேவையில்லை என்று நினைத்தால் அது தவறு. ஸ்பின்னராக முதிர்ச்சியடையவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரையும் எளிதில் புரிந்து கொண்டு விடுவார்கள் என்றார்.

யார் சுனில் ஜோஷி?
1996 முதல் 2001 வரை இந்திய அணியில் முக்கியமான நட்சத்திர வீரர்களுடன் ஆடியவர் சுனில் ஜோஷி. 15 டெஸ்ட்டில் 41 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் 615 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications