For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஜித் வடேகர் காலமானார்.. இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்!

இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மும்பையில் நேற்று இரவு காலமானார்.

Recommended Video

அஜித் வடேகர் காலமானார்...இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்!- வீடியோ

மும்பை: டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கேப்டனாகவும், ஒருதினப் போட்டிகளில் இந்தியாவின் முதல் கேப்டனாகவும் இருந்த அஜித் வடேகர் உடல்நலக் குறைவால் மும்பையில் நேற்று இரவு காலமானார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 77 வயதாகும் அஜித் வடேகர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

former captain Ajit wadekar passed away

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் முன்னோடியாக இருந்தவர் வடேகர். 1966ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். 8 ஆண்டுகளில் 37 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார். அதில் ஒரு சதம், 14 அரை சதங்களுடன் 2,113 ரன்கள் குவித்துள்ளார்.

1971ல் அப்போது மிகவும் வலுவான டெஸ்ட் அணிகளான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை வடேகர் தலைமையிலான இந்திய அணி வென்றது.

இதைத் தவிர அவர் இரண்டு ஒரு தினப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு அரை சதம் உள்பட 73 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் முதல் ஒருதினப் போட்டியில் கேப்டனாக செயல்பட்டவர் வடேகர். 1990களில் இந்திய அணியின் மேலாளராக இருந்த அவர், பின்னர் தேர்வுக் குழுத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

Story first published: Thursday, August 16, 2018, 9:49 [IST]
Other articles published on Aug 16, 2018
English summary
Former test captain ajit wadekar passes away
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X