என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசில..! பிசிசிஐ வெளுத்த தாதா..! எல்லாம் ராகுலால் வந்தது
Recommended Video
மும்பை: முன்னாள் கேப்டன் டிராவிட்டுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ள நோட்டீசுக்கு தாதா சவுரவ் கங்குலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அண்மையில் ராகுல் ட்ராவிட்டுக்கு ஆதாயம் தரும் 2 பதவிகளில் உள்ளார் என்றும் அதற்கான உரிய அளிக்குமாறும் விளக்கம் கேட்டு பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியது. வரும் 16ம் தேதிக்குள் விளக்கம் தருமாறு கூறியிருந்தது.
பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி கூறியது இதைத்தான். நோட்டீசில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள ராகுல் ட்ராவிட், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவராகவும் உள்ளார். இது ஆதாயம் தரும் இரட்டை பதவி. எனவே வரும் 16ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சச்சினுக்கு நோட்டீஸ்
முன்னாள் இந்திய வீரர்கள் மீது இதுபோன்று இவ்வாறு குற்றச்சாட்டுகள் கூறுவது முதல் முறையல்ல. முன்னதாக, பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் இருந்து கொண்டு, மும்பை இந்தியன்ஸ் ஐகானாகவும் செயல்படுவதாக சச்சின் மீது குற்றம்சாட்டியது.

பிசிசிஐயிடம் விளக்கம்
இது குறித்து பிசிசிஐயிடம் விளக்கம் ஒன்றும் அளிக்கப்பட்டது. அதில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகிறார். அதற்காக எந்தவித பலனையும் பெறுவதில்லை என்று விளக்கமளித்த அதன் பின்னரே அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

கங்குலி டுவிட்டர்
இதேபோல ஏற்கெனவே கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுபற்றி ட்விட்டரில் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.
பேஷனாகிவிட்டது
அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட்டில் உலகில் இது ஒரு புதிய பேஷனாக போய்விட்டது. எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்க இது ஒரு சிறந்த வழி. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று சாடியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications