
அதிரடி நாயகன் கபில்தேவ்
தனது காலத்தில் அதிரடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் கபில்தேவ். பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி, கேப்டன்சியிலும் சரி தனக்கென தனி ஸ்டைல் கொண்டவர். இவரது அதிரடி பேட்டிங்கால்தான் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று கோப்பையையும் அள்ளி வந்தது. அந்தக் கோப்பைதான் இந்தியாவின் முதல் உலகக் கோப்பை.

அபார வேகப்பந்து வீச்சாளர்
பவுலிங்கில் இவரது ஸ்டைலே தனி. இவரைப் போன்ற ஒரு அபாரமான வேகப் பந்து வீச்சாளர் அதன் பிறகு நமக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல உலகத் தரமான பேட்ஸ்மேன்களை மிரட்டியவர் கபில் தேவ். ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பிறகு அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய வீரர் கபில் தேவ்தான். இன்று வரை கபில்தேவுக்கென்று தனி முத்திரை உண்டு.

ஸ்டைல் ஸ்டைல்தான்
அதிரடி மட்டுமல்ல ஸ்டைலிலும் இவர் தனிதான். இடையே சில காலம் காதில் கடுக்கன் போட்டுக் கொண்ட செம ஸ்டைலாக வலம் வந்தார். அதேபோல மனதில் பட்டதை பளிச்சென பேசக் கூடியவர் கபில்தேவ். சில காலம் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர். அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. 83 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் உருவான ரசிகர்கள். எல்லாம் இப்போது வயதானவர்கள் என்றாலும், அவர்கள் இவரது ஸ்டைலை பார்க்கிறார்கள், பின்பற்றுகிறார்கள்.

சிவாஜி பட ஸ்டைல்
இந்த நிலையில், லாக்டவுனில் அந்த வயதானவர்களுக்கு தன் ஸ்டைலை மாற்றி செம பூஸ்ட் கொடுத்துள்ளார் கபில்தேவ். அதுதான் இந்த மொட்டை பாஸ் ஸ்டைல். சுத்தமாக தலையை வழித்தெடுத்துள்ளார். தாடி மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ்காரர் போல இருக்கிறார். திடீர்னு பார்த்தால் ரிச்சர்ட்ஸ் மாதிரி இருக்கிறார். சிரித்தால் சிவாஜி பட ரஜினி மாதிரி இருக்கிறது.

மனதை தெம்பாக வைத்துக் கொள்ளுங்கள்
இந்தப் படத்தில் நமக்கு இன்னொரு அருமையான மெசேஜ் ஒளிந்திருக்கிறது.. அது.. ஜாலியா இருங்க.. எதையும் நினைச்சுப் பயப்படாதீங்க.. இயல்பா இருங்க.. தைரியமா இருங்க.. உங்க ஸ்டைலை விடாதீங்க.. கொரோனா போன்ற சோதனைகளை நாம ஜாலியா எடுத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும். அதற்கு மனசை தெம்பா வச்சுக்கிறது முக்கியம்.. இதுதான் கபில்தேவின் புகைப்படம் நமக்குத் தரும் செய்தி. சூப்பர் தலைவா!


Click it and Unblock the Notifications











