சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள்... ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் கேப்டன் கூல்

ராஞ்சி : முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கிரிக்கெட்டில் தனது 15வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு கிங்ஸ் XI பஞ்சாப், ஐசிசி மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியில் சட்டோகரத்தில் வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியை தோனி ஆடினார்.

தோனி தலைமையில் இந்தியா இரண்டு உலக கோப்பை போட்டிகளை சந்தித்துள்ளது. கேப்டன் பதவியில் தோனியின் அமைதியான அணுகுமுறை உலக அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள்

கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள்

கேப்டன் கூல் என்று பெருமையுடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட்டில் தன்னுடைய 15 ஆண்டுகளை முடித்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வங்கதேசத்திற்கு எதிராக ஆட்டம்

வங்கதேசத்திற்கு எதிராக ஆட்டம்

கடந்த 2004ல் வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் சர்வதேச போட்டியை சட்டோகரத்தில் தோனி துவங்கினார். அதுமுதல் விக்கெட் கீப்பிங், பேட்டிங், பீல்டிங் என பன்முக திறமைகள் மூலம் கலக்கலான ஆட்டங்களை அவர் ரசிகர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.

2011ல் உலக கோப்பை வெற்றி

தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011ல் உலக கோப்பை வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த கோப்பைக்கான இறுதிப் போட்டியில் கேப்டன் கூலின் பங்களிப்பு அளப்பரியது. தோனியின் இந்த தருணம் குறித்து தற்போது ரசிகர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஐசிசியும் பாராட்டு

தோனியின் 15 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றை பெருமைப்படுத்தும்வகையில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி மற்றும் ஐசிசியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

ரசிகரின் வீடியோ பதிவு

இதனிடையே, தோனியின் ஆட்டத்தை மிஸ் செய்வதாக கூறி ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பதிந்துள்ள வீடியோ பதிவும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

தோனியின் தீவிர ரசிகர்கள்

தோனியின் 15 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, அவருக்கு பாலபிஷேகம் மற்றும் ஆரத்தி காட்டும் வீடியோவையும் ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர்.

கேப்டனாக பரிமளித்த தோனி

கேப்டனாக பரிமளித்த தோனி

விக்கெட் கீப்பிங், பேட்டிங், பீல்டிங் என்று பல்வேறு தளங்களில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்திய போதிலும், கேப்டனாக செயல்பட்ட போதே அவர் அனைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்திய அணியில் தொடர்வாரா?

இந்திய அணியில் தொடர்வாரா?

கடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் மோதிய இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இதையடுத்து சர்வதேச போட்டிகளில் விளையாட தோனி ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் வரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அவர், தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
MS Dhoni finishes his 15th years in International cricket
Story first published: Monday, December 23, 2019, 15:16 [IST]
Other articles published on Dec 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X