மீண்டும் களமிறங்கும் தோனி? .. ஆசியா லெவன் அணிக்காக விளையாடுவாரா?
பெங்களூரு : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விளையாடப்பட உள்ள ஆசியா XI மற்றும் உலக நாடுகள் XI போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க தேச கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள இந்த தொடரில் சர்வதேச அணி வீரர்கள் மோதும் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிசிசிஐ-யிடம் இந்த போட்டிக்காக தோனி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, விராத் கோலி, ரோஹித் ஷர்மா, புவனேஸ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடஜா போன்ற வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஆடப்பட உள்ள இந்த தொடரில் தோனி பங்கேற்று ஆடினால், அவரின் ஆட்டத்தை எதிர்நோக்கியுள்ள அவரது ரசிகர்களுக்கு அது இனிப்பான செய்தியாக இருக்கும்.

தவிர்க்கும் தோனி
கடந்த ஜூலை மாதத்தில் உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது முதல் சர்வதேச போட்டிகளில் விளையாட முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆர்வம் காட்டாமல் விலகியுள்ளார்.

தவிர்ப்பு
கடந்த மாதங்களில் மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட சர்வதேச அணிகளுடன் இந்தியா மோதிய நிலையில், இந்த தொடர்களில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்த மாதம் விளையாடப்பட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

சந்திப்பாரா தோனி?
இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்துவரும் ஆசியா XI மற்றும் உலக நாடுகள் XI அணிகளுக்கிடையிலான சர்வதேச போட்டி வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் தோனி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜடேஜாவிற்கும் அழைப்பு
ஆசியா XI சார்பில் தோனி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, விராத் கோலி, ரோஹித் ஷர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களை விளையாட அனுப்ப வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.

மீண்டும் விளையாடுவார்
இந்த வீரர்களுடன் ஆசிய அணியிலும், உலக நாடுகள் அணியிலும் சர்வதேச அளவில் சிறந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளிக்கும் பட்சத்தில், அதில் தோனி பங்கேற்று மீண்டும் தன்னை சர்வதேச போட்டிகளில் நிலைநிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications