6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி!
Recommended Video
பெங்களூரு : இந்திய கிரிக்கெட்டில் தன்னுடைய 6வது இடம் இன்னும் நிரப்பப்படாதது குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டன் கூல் என்ற பட்டத்திற்கும் சொந்தக்காரராக விளங்கும் தோனி, எப்போதும் 6வது நபராக தனது பேட்டிங்கை துவங்கி, அந்த போட்டியை சிறப்பாக முடித்தும் கொடுப்பார்.
சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ள தோனியின் அந்த 6வது இடம் தற்போது காலியாக உள்ளது. அதை நிரப்ப கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து முயற்சித்தும், அதற்கான பலன்கள் கிடைத்தபாடில்லை.

சிறந்த ஆட்டக்காரர்
விக்கெட் கீப்பராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்திற்கு சொந்தக்காரர் எம்.எஸ். தோனி. கேப்டனாகவும் தன்னை நிரூபித்து உலக கோப்பையை இந்தியாவிற்கு பரிசளித்த தோனி, அணியில் 6வது ஆட்டக்காரராக களமிறங்கி, அந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குவார்.

சர்வதேச ஆட்டத்தில் விலகிய தோனி
கடந்த உலகக்கோப்பை போட்டியில் பதக்கம் வெல்லாமல் இந்திய அணி வெளியேறியது. அதிலிருந்து இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தோனி விலகியுள்ளார்.

மனம்திறந்த தோனி
இந்நிலையில் அணியில் தான் இறங்கி விளையாடும் 6வது இடம் குறித்து தோனி தற்போது மனம் திறந்துள்ளார். பிராக்டிகலாக ஒரு விஷயத்தை அணுகுவதே வெற்றிக்கு இடமளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறந்த வெற்றியை அடையலாம்
குருகிராமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடைமுறைக்கு உகந்த எண்ணம் மற்றும் செயல்பாடே சிறந்த வெற்றியை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பிரதிபலிப்பது மகிழ்ச்சி
இந்தியாவிற்காக விளையாடுகிறோம் என்ற எண்ணம் முக்கியமாக மனதில் இருக்க வேண்டும். இதற்காக பிராக்டிகலாக யோசித்து சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடைமுறை சிக்கல்களும் ஏற்படலாம்
தான் இறங்கி விளையாடும் 6வது இடம் குறித்து பேசிய தோனி, 6வது இடத்தில் இறங்கி, 15 பந்துகளில் 30 ரன்களை அடிப்பது மிகச்சிறந்த விளையாட்டுதான் ஆனால், அதிலும் தடைக்கற்கள் ஏற்படலாம் என்பதை நினைவில் கொண்டு விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications