Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடம் பிடித்த ரோஹித்.. ரிவ்யூ கேட்கச் சென்ற கோஹ்லி.. வேறு முடிவெடுத்த டோணி ரிவ்யூ சிஸ்டம்!

Recommended Video

ரிவ்யூ சிங்கம்ன்னு மீண்டும் நிரூபித்த தல தோனி- வீடியோ

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா இந்தியா மோதிய 4வது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்க்கில் நடைபெற்றது. இதில் இந்திய டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

தவான் அதிரடியாக 109 ரன்கள் எடுத்தார்.இந்தியா 289 ரன்கள் எடுத்து. மழை காரணமாக தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது.

அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது. போட்டியில் டோணி மீண்டும் ரிவ்யூ சிஸ்டத்தில் தான் ஒரு புலி என்று நிரூபித்துள்ளார்.

ரிவ்யூ கேளுங்கள்

ரிவ்யூ கேளுங்கள்

இதில் பும்ரா போட்ட பந்து அம்லா கால் வழியே சென்றது. அங்கு இருந்த அனைவருக்கும் பேட்டில் பந்து பட்ட சத்தம் கேட்டது. இதனால் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்க சொன்னார். கோஹ்லியும் ரிவ்யூ கேட்க முடிவு செய்தார்.

வேண்டாம் வேண்டாம்

ஆனால் டோணி உடனே தலையை இரண்டு பக்கமும் ஆட்டினார். பின் வேண்டாம் ரிவ்யூ கேட்க வேண்டும் என்று சைகையில் கூறினார். இதனால் கோஹ்லி ரிவ்யூ கேட்காமல் செல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

இந்த நிகழ்விற்குப் பின் அதை சாதாரணமாக சோதனை செய்து பார்த்தார்கள். அப்போது பந்து பேட்டில் படாமல் சென்று உள்ளது. இதன் மூலம் டோணி மீண்டும் ஒருமுறை தனது ரிவ்யூ அறிவு எவ்வளவு சிறந்தது என்று நிரூபித்துள்ளார்.

தல

இவர் ''பொதுவாக பின்னாடி இருக்கும் கீப்பர் விக்கெட் விழுந்ததா இல்லையா என்று எளிதாகச் சொல்ல முடியும். ஆனால் டோணி அதில் கொஞ்சம் சிறந்தவர்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, February 12, 2018, 15:05 [IST]
Other articles published on Feb 12, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+