Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை 2022: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. கோப்பை அந்த அணிக்கு தான்.. வாட்சன் கணிப்பு

அமீரகம்: ஆசிய கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்.

Recommended Video

Rohit Sharma-வின் Captaincy Records! Asia Cup-ல் வெற்றி உறுதி? | Aanee's Appeal | *Cricket

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் சனிக்கிழமை ( ஆகஸ்ட் 27 ) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக அமீரகம் சென்றடைந்துள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடரை இதுவரை அதிகபட்சமாக இந்திய அணி 7 முறை வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி 2 முறையும் வென்றுள்ளன. இந்த முறை இந்தியா அல்லது பாகிஸ்தான் அணிகள் தான் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரோகித் சர்மா தலைமையில் புதிய இந்திய அணி ஒருபுறமும், பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணியும் மிக பலமாக உள்ளன.

ஷேன் வாட்சன் கணிப்பு

ஷேன் வாட்சன் கணிப்பு

இந்நிலையில் இந்த முறை யார் கோப்பை வெல்வார் என ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆசிய கோப்பையில் மிக முக்கியமான போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி தான் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் கோப்பையையும் கைப்பற்றி அசத்தும்.

யாருக்கு வெற்றி

யாருக்கு வெற்றி

என்னை பொறுத்தவரையில் இந்திய அணி இந்த முறை வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதுபோல், இந்த முறையும் இந்தியாவை வீழ்த்தலாம் என பாகிஸ்தான் வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இந்த முறை அந்த பாட்ஷா பழிக்காது.

காரணம் என்ன

காரணம் என்ன

தற்போது உள்ள இந்திய அணி மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் வரிசையில் முக்கிய வீரர்கள் கம்பேக் கொடுத்துள்ளதால் எந்த குறையும் இல்லை. பந்துவீச்சிலும் எந்த பிரச்சினையும் இல்லை. ரோகித் சர்மா தலைமையில் வெற்றியை பெற போதிய பலத்துடன் இந்தியா உள்ளது என ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

Story first published: Thursday, August 25, 2022, 19:00 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+