இந்தியா வெல்லும் என்பதை நான் முன்பே சொன்னேன்-கபில்தேவ்
டெல்லி: இந்திய அணி சிறப்பான நிலையில் உள்ளதால் நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்பதை நான் முன்பே திட்டவட்டமாக நம்பினேன், அதை பலமுறை கூறியும் உள்ளேன். இன்று இந்திய அணியினர் அதைச் சாதித்துக் காட்டி விட்டார்கள் என்று கூறியுள்ளார் 1983ல் இந்தியாவுக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ்.

இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்து கபில்தேவ் பெருமைப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி சிறப்பான நிலையில் இருப்பதை நான் உணர்ந்தேன். நிச்சயம் இந்த அணி கோப்பையை வெல்லும் என்று நான் கூறியிருந்தேன்.
மனதளவிலும், விளையாட்டு அளவிலும் டோணி தலைமையிலான அணி சிறப்பானதாகவும், நிலையானதாகவும், சமச்சீருடனும் கூடியதாக இருந்ததாக நான் கூறியிருந்தேன். இன்று அவர்கள் கோப்பையை வென்றுள்ளனர்.
கடந்த 28 ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது இந்திய அணி. அந்த ஏக்கம் இன்று தீர்ந்துள்ளது.
இந்திய வீரர்கள் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டுவென்டி 20 என பல போட்டிகளில் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இருந்தாலும், இந்த வெற்றிதான் உச்சம் என்று பெருமையுடன் கூறியுள்ளார் கபில்தேவ்.
முன்னாள் வீரர் பிஷன்சிங் பேடி கூறுகையில், தற்போது சச்சினுக்காக இந்தக் கோப்பையை வென்றிருக்கலாம் இந்திய அணி. அடுத்த நான்கு ஆண்டுகளில் வீரேந்திர ஷேவாக்குக்காக இந்தியா விளையாடி அடுத்த கோப்பையையும் கைப்பற்ற வேண்டும் என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:படங்கள்
Story first published: Thursday, June 7, 2012, 11:20 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications