Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு முன்னாடி எந்த டீமும் இப்படி இருந்ததில்ல, அவ்ளோ வெரைட்டி இருக்கு..புகழ்ந்து தள்ளும் ஜாம்பவான்

புனே: அடுத்தடுத்த தொடர்களில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தற்போது இங்கிலாந்துடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது உள்ள இந்திய அணி முன் எப்போதும் இல்லாத வகையிலான சிறந்த அணி என முன்னாள் வீரர் க்ளைவ் லாய்ட் தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரில் 1 - 0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அறிமுக வீரர்களின் அசத்தல் ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் க்ளைவ் லாய்ட் இது தான் இதுவரை இருந்ததிலேயே சிறந்த இந்திய அணி என்று பாராட்டியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி சிறந்த அணியாகிவிட்டது. அந்த அணியில் பலவிதமான வெரைட்டியான வீரர்கள் உள்ளனர். இந்திய வீரர்கள் முழு உடற்தகுதியுடனும், சிறப்பாக ஆடுகின்றனர். ஆஸ்திரேலியா தொடரில் பின்னடவை சந்தித்து பின்னர் இந்தியா மீண்டு வந்ததை வைத்து சொல்லலாம் தற்போது உள்ள அணிதான் இதுவரையிலான சிறந்த இந்திய அணி என தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் டெஸ்ட்

டெஸ்ட் டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தொடக்கத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. குறிப்பாக 36 ரன்களில் ஆல் அவுட்டாகி படு மோசமாக தோற்றது. பின்னர் விராட் கோலி நாடு திரும்ப, ரஹானே கேப்டன்சி பொறுப்பை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இந்திய அணி மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்து தொடரை 2 - 1 என வெற்றி பெற்றது.

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணியின் வெற்றிகளில் பும்ராவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் எப்போதும் சிந்தனை மற்றும் செயல்கள் எப்போதும் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. பந்தை வேகமாக போடுவதிலும் சரி, ஸ்லோவர் டெலிவரி போடுவதிலும் சரி மிகச்சிறப்பாக செயல்படுகிறார். இவரால்தான் இந்தியா இன்று இந்த இடத்தில் இருக்கிறது. அணி சிக்கலில் இருக்கும் போது பும்ரா மிகப்பெரும் திருப்புமுணையை ஏற்படுத்தி தருகிறார் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 25, 2021, 11:33 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+