Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘நீயாக முடிவெடுப்பதா..?’ கோலியின் பதவி விலகல்.. கபில் தேவ் கடும் அதிருப்தி!

மும்பை: இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

காரணங்கள் என்ன? T20 Captain பதவியை துறந்த Virat Kohli | Oneindia Tamil

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனியாக கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இதுகுறித்து பேச்சுக்கள் மீண்டும் வலுக்க தொடங்கியது.

கோலி பதவி விலகல்

கோலி பதவி விலகல்

இதனையடுத்து சர்ச்சைகளுக்கு முடிவுகட்டும் வகையில் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்து வருகிறேன். பணிச்சுமையை கருத்தில் கொண்டு வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

விராட் கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கேப்டன்சி, கிங் கோலி என பல்வேறு ஹேஷ்டேக்குள் மூலம் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பிசிசிஐ அதிகாரிகளுக்கும் அறிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ்

கபில் தேவ்

இந்நிலையில் கோலியின் இந்த திடீர் அறிவிப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், விராட் கோலியின் இந்த முடிவு ஆச்சரியமளிக்கிறது. தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே இது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதை பார்க்கும் போதும் அதனை விட பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

கடினமாக உள்ளது

கடினமாக உள்ளது

கேப்டன் பதவியில் இருந்து விலகுவது போன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அணி தேர்வர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க வேண்டும். எனவே கோலியின் இந்த முடிவு ஒரு கேப்டனாகவும், ஒரு வீரனாகவும் எனக்கு கஷ்டமாக உள்ளது. விராட் ஒரு மிக முக்கிய வீரர், அவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்கைக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, September 17, 2021, 10:54 [IST]
Other articles published on Sep 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+