Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்து கத்துக்கோங்க.. மேட்ச் முடிந்ததும் ரெய்னா சொன்ன அந்த வார்த்தை..யுவராஜை நெருக்கும் ரசிகர்கள்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி குறித்து முன்னாள் வீரர் ரெய்னா செய்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கு ஸ்பின் பவுலர்கள் முக்கிய காரணம் ஆகும். அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினார்கள்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அக்சர் பட்டேல் 11 விக்கெட், அஸ்வின் 7 விக்கெட் எடுத்தனர். இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் தற்போது பாராட்டி வருகிறார்கள்.

ஸ்பின்

ஸ்பின்

இந்த நிலையில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக யுவராஜ் சிங் டிவிட் செய்து இருந்தார். .அதில், இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்துவிட்டது. இது நல்ல டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் உள்ளது. ஹர்பஜன், அணில் கும்ப்ளே இந்த பிட்சில் பவுலிங் செய்திருந்தால் அவர்கள் 1000 அல்லது 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். இருந்தாலும் நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் டிவிட் செய்துள்ளார்.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்கின் இந்த டிவிட் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் இவரை பலரும் ரெய்னாவோடு ஒப்பிட தொடங்கி உள்ளனர். நேற்று இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து டிவிட் செய்த ரெய்னா, இந்திய அணி வீரர்கள் இரண்டு நாட்களில் போட்டியை முடித்து வெற்றிபெற்றுள்ளனர். இதை நம்பவே முடியவில்லை.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இது மிகவும் சிறப்பான வெற்றி, என்று பாராட்டி உள்ளார். அதேபோல் அஸ்வின், அக்சர் பட்டேலின் பவுலிங்கை தனியாக குறிப்பிட்டு, அவர்களின் சாதனையை மனதார பாராட்டி இருக்கிறார். ரெய்னாவின் இந்த டிவிட்டை வைத்துதான் யுவராஜை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ரெய்னா

ரெய்னா

ரெய்னாவும் முன்னாள் வீரர்தான். ஆனால் அவரை பாருங்கள், இளம் வீரர்களை எப்படி பாராட்டுகிறார் என்று.. யுவராஜ் ரெய்னாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். ரெய்னா எப்போதும் வீரர்களை குறித்து எதிர்மறையாக பேசியது கிடையாது.

கங்குலி

கங்குலி

ஆனால் கங்கிலிக்கு கீழ் ஆடிய ஹர்பஜன், இர்பான், கம்பீர், சேவாக், சச்சின் போன்ற வீரர்கள் எல்லோரும் இளம் வீரர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதில் யுவராஜும் தற்போது சேர்ந்துவிட்டார். இவர்கள் எல்லோரும் ரெய்னாவிடம் பாடம் படிக்க வேண்டும் என்று இணையத்திலும் பலரும் கடுமையாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, February 26, 2021, 20:37 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+