For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தோனியின் குணம்.. இன்று விராட் கோலிக்கு” ஒருநாள் அணி தேர்வில் நடந்த குழப்பம்.. சுவாரஸ்ய தகவல்!

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தோனியின் குணத்தை போலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி வீரர்களை நேற்று பிசிசிஐ அறிவித்தது. ரோகித் சர்மாவுக்காக கடைசி வரை காத்திருந்த பிசிசிஐ, இறுதியாக நேற்று அவரை கழட்டிவிட்டது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

ரோகித் சர்மாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் அணிக்குள் எழுந்துள்ளது. அணியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கும் போது கே.எல்.ராகுலை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. மேலும் ஜஸ்பிரித் பும்ராவை துணைக்கேப்டனாக நியமித்தது. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணத்தை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இனி இந்திய அணியை விராட் கோலி வழி நடத்த விருப்பம் தெரிவிக்க மாட்டார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி வழங்கியதில் ஒரு பிரச்சினையையும் நான் பார்க்கவில்லை. தோனி விளையாடிய நாட்களில் கூட இதுபோன்று நடந்துள்ளது.

தோனி குணம்

தோனி குணம்

சிறிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இளம் வீரர்களிடம் கேப்டன்சி பதவியை கொடுத்துவிட்டு விலகிவிடுவார் எம்.எஸ்.தோனி. மேலும் வீரர்களிடம் வென்று வர வேண்டும் என நம்பிக்கை கூறி அனுப்புவார். அப்போது தான் இளம் வீரர்களிடம் இருக்கும் கேப்டன்சி திறமைகள் வெளிப்படும். இதனை தான் பிசிசிஐ இதுவரை செயல்படுத்தி வருகிறது. விராட் கோலிக்கு கேப்டன்சி தற்போது கொடுத்திருந்தாலும், அவர் இதை தான் செய்திருப்பார்.

கேப்டன் அனுபவம்

கேப்டன் அனுபவம்

3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் கே.எல்.ராகுல். ஐபிஎல் தொடர் மூலம் அவருக்கு நல்ல கேப்டன்சி அனுபவங்கள் உள்ளது. ரோகித் சர்மா இல்லாத போது ராகுல் தான் கேப்டன்சிக்கு சிறந்த தேர்வாக இருப்பார். அவரிடம் அந்த திறமை தெரிகிறது. மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்.

Story first published: Saturday, January 1, 2022, 18:56 [IST]
Other articles published on Jan 1, 2022
English summary
Former Cricketer Salman Butt explains logic behind KL rahul announced as ODI Captain instead of Virat kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+