“கிரிக்கெட் வீரர்களை கெடுத்துவிடாதீர்கள்”.. ரோகித் சர்மாவின் சொதப்பல் முயற்சி.. ஸ்ரீகாந்த் விளாசல்!
செயிண்ட் கிட்ஸ்: கிரிக்கெட் வீரர்களை மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் என ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்திய அணியில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் ரசிகர்களுக்கு பெரும் குழப்பங்களை உண்டாக்கி வருகின்றன.

புதிய முயற்சிகள்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்களை தேர்வு செய்வதற்காக டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்து வருகின்றனர். அதாவது ஓப்பனிங்கிற்கு என்று தனி வீரரை வைக்காமல் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் வீரர்களை ஓப்பனிங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் ஓப்பனிங் ஆடிய நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வருகிறார்.

ஏமாற்றிய திட்டம்
ஆனால் டிராவிட்டின் இந்த திட்டம் பயனளிக்கவில்லை. இதுவரை நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் அவர் ஒரு ஓப்பனராக ( 24 ), (11) என மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவரை மீண்டும் மிடில் ஆர்டருக்கே அனுப்ப வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஸ்ரீகாந்த் கடும் அதிருப்தி
இந்நிலையில் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சரி ஸ்ரீகாந்த் இந்த விவகாரத்தில் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் நம்.4 வது இடத்தில் மிகச் சிறப்பான வீரர். டி20 உலகக்கோப்பையிலும் அங்கு தான் அவர் விளையாட வேண்டும். அப்படி இருக்கையில் ஏன் ஓப்பனிங் களமிறக்கி அவரை குழப்பமடைய செய்கிறீர்கள். உங்களுக்கு ஓப்பனிங் வேண்டுமென்றால் ஸ்ரேயாஸை நீக்கிவிட்டு, இஷான் கிஷானை கொண்டு வரவேண்டியது தானே எனக் கூறியுள்ளார்.

கெடுத்து விடவேண்டாம்
தொடர்ந்து பேசிய அவர், கிரிக்கெட் வீரர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். சம்பந்தம் இன்றி சூர்யகுமார் ஓப்பனிங் களமிறங்கி 2 சொதப்பல்களை பார்த்துவிட்டால், அவரின் நம்பிக்கை உடைந்துவிடும். எனவே தயவுசெய்து அவரை போன்ற சிறந்த வீரர்களை கெடுத்து விடாதீர்கள் என ரோகித் சர்மாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications