ஒரே ஒரு தவறு தான்.. தொடர்ந்து அதிலே விக்கெட் ஆகிறார்.. கோலிக்கு கவாஸ்கர் அட்வைஸ்!
ஹெட்டிங்லி: இந்திய அணி கேப்டன் விராட் கோலி அனுபவ வீரராக இருந்த போதும், பேட்டிங்கில் முக்கிய தவறுகளை செய்து வருகிறார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இதில் இந்திய அணி டாஸ் வென்ற போதும் பெரிய அளவில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கும், 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்களான ரோகித், கே.எல்.ராகுல் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தனர். எனினும் அவர்களின் ஃபார்ம் கூட இந்த ஒரு போட்டியில் தான் மோசமாக இருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலியின் ஃபார்ம் நீண்ட நாட்களாக பரிதாபமான நிலையில் உள்ளது.

மீண்டும் சொதப்பிய கோலி
கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து, ஆண்டர்சனின் லைன் அன்ட் லெந்த் பந்தில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டோடு சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சனிடம் 7வது முறையாக அவுட்டாகி வெளியேறி இருக்கிறார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் 3 இலக்க ரன்களை எட்ட முடியாமல்.. அதாவது சதம் அடிக்க முடியாமல், விராட் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50வது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டு காலமாக 18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 50 போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் விளையாடி வருகிறார்.

கவாஸ்கர் அறிவுரை
இந்நிலையில் கோலி பேட்டிங்கில் செய்யும் தவறு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அட்வைஸ் கூறியுள்ளார். விராட் கோலி தன்னுடைய ஷாட்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து தவறு செய்து வருகிறார். மிகவும் எளிமையாக விளையாடியிருக்கலாம். ஆனால் கோலி சிரமப்பட்டுவிட்டார்.
கவனம் தேவை

அதில் கவனம் தேவை
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 8000 ரன்களை அடித்துள்ளார். அதில் 6500 ரன்களை கிரீஸுக்கு வெளியே நின்றுதான் கோலி அடித்துள்ளார். அதனால் அவர் பேட்டிங்கில் பெரிதாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கோலியின் ஷாட் தேர்வில் தான் பிரச்சனை உள்ளது. எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை விட வேண்டும் என்பதில் இன்னும் அவர் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும். கோலி அவுட்டான பந்துகள் எல்லாம் ஒரே மாதிரியான பந்துகள் தான்.

எந்த பந்தை அடிக்க வேண்டும்
என்னைப் பொறுத்தவரை விராட் கோலி பந்தினை நன்கு கவனித்து விளையாட வேண்டும். 4வது ஸ்டம்பில் வரும் பந்துகளை தைரியமாக இறங்கி விளையாடலாம். ஆனால் 5வது மற்றும் 6வது ஸ்டம்புக்கு வரும் பந்துகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை என கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications