நான் வியந்துவிட்டேன்... ரெய்னாவின் மனதில் இடம்பிடித்த 3 இளம் வீரர்கள்.. ரிஷப் பண்ட்க்கு இடம் இல்லை!
சென்னை: இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தன்னை வியக்கவைத்த 3 இளம் வீரர்களை கூறியுள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் வீரர்களின் படை உலகின் பல்வேறு வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
உலக தரம் வாய்ந்த வீரர்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளனர். தற்போது 2 இந்திய அணிகள் உருவாக்கப்பட்டு இங்கிலாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்பட்டுள்ளதே அதற்கு உதாரணம்.
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்களில் சுரேஷ் ரெய்னாவும் முக்கியமானவர்.

இளம் வீரர்களின் எண்ணிக்கை
ஐபிஎல் தொடரின் மூலமும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியிலும் நன்கு பயிற்சி பெறும் இளம் வீரர்கள் சர்வதேச அளவில் கூட எந்தவித பதற்றமும் இன்றி விளையாடி வருகின்றனர். பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், முகமது சிராஜ், நடராஜன் என பலரும் சர்வதேச போட்டிகளில் தொடக்கத்திலேயே அசத்தியிருந்தனர்.

இலங்கை டூர்
இளம் வீரர்களை டி20 உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் வகையில், தற்போது ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு 2வதாக ஒரு இந்திய அணியை உருவாக்கியுள்ளது பிசிசிஐ. ஷிகர் தவான் தலைமையிலான அந்த அணி இலங்கையின் மெயின் அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

3 பேர்
இந்நிலையில் தற்போதுள்ள இந்தியாவின் இளம்படையில், தன்னை வியக்கவைத்த 3 வீரர்களை முன்னாள் ரெய்னா சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லின் ஆட்டத்தை பார்த்து வியந்தேன். அவருக்கு அடுத்ததாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ருத்ராஜ் கெயிக்வாட் சிறப்பாக விளையாடுகிறார். அதன் பின்னர் அக்ஷர் பட்டேல் சிறந்த ஆல்ரவுண்டராக செயல்படுகிறார். ஜடேஜா இல்லாத குறையை தீர்க்க அக்ஷர் பட்டேல் உள்ளார்.

ரிஷப் பண்ட் இல்லை
சுரேஷ் ரெய்னாவின் இந்த பட்டியலில் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்-ன் பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது. ரிஷப் பண்ட் குறித்து பேசிய ரெய்னா, பண்ட் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்பு சிக்ஸர்களுக்கு மட்டுமே டார்கெட் செய்துவந்த அவர், தற்போது பவுண்டரிகள் மீது கவனம் செலுத்துகிறார். இவை அனைத்திற்கும் காரணம் பயிற்சியாளர் டிராவிட் தான் என ரெய்னா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications